சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல்: ரேஷன் அட்டைக்கு ரூ.1000? வங்கி கணக்குடன் ஆதாரை மட்டும் இணையுங்க.. கூட்டுறவுத்துறை சர்குலர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக தான் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் வழக்கமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேலைகளின் டிசைன், வண்ணம் மாற்றப்பட்டன.

புல்வெளி புல்வெளி.. பனித்துளி பனித்துளி.. உறைபனியில் உறைந்த உதகை.. நடுங்க தொடங்கிடுச்சு புல்வெளி புல்வெளி.. பனித்துளி பனித்துளி.. உறைபனியில் உறைந்த உதகை.. நடுங்க தொடங்கிடுச்சு

ரூ.1000 வழங்க முடிவு?

ரூ.1000 வழங்க முடிவு?

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்னும் அரசு தரப்பில் உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

வங்கி கணக்கு விபரம் இல்லை

வங்கி கணக்கு விபரம் இல்லை

இதற்கிடையே தான் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற. அதாவது சமீபத்தில் கூட்டுறவு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்போது ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். இருப்பினும் ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என காட்டுகிறது. மொத்தம் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை என தரவுகள் கூறுகிறது.

வங்கி கணக்கு துவங்க..

வங்கி கணக்கு துவங்க..

இவர்களுக்கு உடனடியாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க மண்டல இணை பதிவாளர்கள், பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மேலும், வங்கி கணக்கு வைத்திருப்போர் பாஸ் புத்தகத்தின் நகலில், குடும்ப தலைவர் பெயர் மற்றும், குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை என உத்தரவிட்டது. இதற்கான செயல்பாடுகள் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்நிலையில் தான் தற்போது கூட்டுறவுத்துறை பதிவாளர் சார்பில் துறை அதிகாரிகளுக்கு இன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‛‛தமிழகத்தில் 14,84,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருப்பவர்களை சந்தித்து அவர்கள் வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதும். அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை. வங்கி கணக்கு எண் இல்லாதவர்ளை பொறுத்தவரையில் நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதாவது வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களிடம் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை பெற வேண்டும் என முதலில் கூறப்பட்டு இருந்தது. தற்போது அது வேண்டாம் என கூட்டுறவுத்துறை பதிவாளர் தனது அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
While the information is spreading that Rs.1,000 is going to be given on the occasion of Pongal festival in Tamil Nadu, an important announcement has been made by the cooperative department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X