பொங்கலுக்கு சிறப்பு ரயில்.. சென்னையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு போகலாம்? ரிசர்வேசன் இல்லை
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதே போல திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்பதிவு செய்யப்படாத ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதலே வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்குவார்கள்.
பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி கடந்த செப்டம்பர் மாதமே பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து விட்டனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களான பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. இதனையடுத்து சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பயணிகள் காத்திருந்தனர்.
ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2000 முதல் 3000 வரை விற்பனையாகும் எனவேதான் பலரும் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில், முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட 3 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 06001/06002 ஆகிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும். இந்த ரயிலில் 24 பெட்டிகள் இருக்கும். முன்பதிவில்லாத ரயில்களாக இந்த ரயில்கள் இயக்கப்படும். மேலும் இந்த ரயில்களானது வருகிற 14ஆம் தேதி முதல் 17ஆம்தேதி வரை இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையும், அதேபோல் தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை இந்த சிறப்பு ரயில்களானது இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 7.30 க்கு கிளம்பும் ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக தூத்துக்குடிக்கு அன்று இரவு 10 மணி 45 நிமிடங்களுக்கு வந்து சேரும். இந்த 2 நாட்களும் இதே நேரத்தில் வரும்.
அதேபோல் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இதே வழியாக 8 மணி 30 நிமிடங்களுக்கு தாம்பரம் வந்தடையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 14, 16ஆம் தேதியும் மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து ஜனவரி 15, மற்றும் 17ஆம் தேதி 24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவு இல்லாத ஜன் சதர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
பெங்களூரு - திருச்சி ஸ்பெஷல்: பெங்களூருவில் இருந்து திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளிக்கிழமை 12ஆம் தேதியன்று எஸ் எம் வி டி ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணி 30 நிமிடங்களுக்கு கிளம்பும் ரயிலானது பங்காரபேட், ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், வழியாக திருச்சிக்கு இரவு 11.30 மணிக்கு வந்து சேரும். இதனைத்தொடர்ந்து 13ஆம் தேதி காலை 4 மணி 45 நிமிடங்களுக்கு கிளம்பும் ரயிலானது அதே வழியாக மதியம் 12 மணிக்கு பெங்களூரை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications