சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்!

திருவாரூர் இடைத்தேர்தலில் பூண்டி கலைவாணனுக்கு எதிரான சதிகள் நடப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமையா என்று நொந்து கொண்டுள்ளாராம் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர்தான் இந்த பூண்டி கலைவாணன். திமுகவில் அனுபவமிக்கவர்.

கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அடிப்படை காரணம் பூண்டி கலைவாணன் என்றும் பலமுறை வெளிப்படையாகவே பேசப்பட்டது.

ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி.. எதிர் எதிர் கட்சியிலிருந்து களமிறங்கும் சகோதரர்கள்! ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி.. எதிர் எதிர் கட்சியிலிருந்து களமிறங்கும் சகோதரர்கள்!

அழகுபார்த்தார்

அழகுபார்த்தார்

அதைதவிர கருணாநிதியின் குடும்பத்தின் மீது பூண்டி கலைவாணன் ஏகப்பட்ட விசுவாசத்தை வைத்திருப்பவர். அதனால்தான் இடைத்தேர்தலில் கருணாநிதி இடத்தில் கலைவாணனை வைத்து அழகு பார்க்கும் முடிவை எடுத்தார் ஸ்டாலின்.

தீயாக வேலை

தீயாக வேலை

இப்போதும் கலைவாணனிடம் ஒரு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். "இது என் அப்பா நின்ற தொகுதி. இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும்" என்பதுதான். இதற்காக பூண்டி கலைவாணனும் தீயாக வேலை பார்த்து வருகிறார்.

உள்ளடி வேலை

உள்ளடி வேலை

ஆனால் இவருக்கு எதிராக உள்ளடி வேலை நடந்து வருகிறதாம். திமுகவின் முன்னாள் எம்பி ஏகே விஜயன்தான் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயனுக்கு இன்னும் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது, மதிப்பும் உள்ளது.

புலம்புகிறாராம்

புலம்புகிறாராம்

ஆனால் கலைவாணன் வெற்றி பெற்றுவிட்டால், மாவட்டத்தில் வேற லெவலுக்கு சென்றுவிடக்கூடும் என்பதால் நிறைய உள்குத்து வேலையில் விஜயன் ஈடுபடுவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இதனால் கலைவாணன் அப்செட் ஆக இருக்கிறாராம். தலைமை இடும் கட்டளையை செய்து முடிக்கலாம் என்றால், சொந்த கட்சிக்குள்ளேயே இப்படி எதிராக இருக்கிறதே என்று புலம்பி வருகிறாராம்!

English summary
There is a Local Politics against Poondi Kalaivanan's success in the Thiruvarur constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X