எந்த தப்பும் இல்லை.. ஓரினச் சேர்க்கையாளராக உள்ள குழந்தைகளை ஆதரியுங்கள்.. போப் பிரான்சிஸ் கோரிக்கை!
சென்னை: ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
போப் பிரான்சிஸ் முற்போக்கான பார்வை கொண்டவர் என்ற பெயர் பெற்றவர்... இவரின் கருத்துக்கள் பலர் பாரம்பரியமாக போப்கள் தெரிவித்த கருத்துக்களை விட மாறுபட்டே இருந்துள்ளது. தன் பாலின உறவு, இரு பாலின உறவு உள்ளிட்ட LGBTQ+ பிரிவினர் குறித்து பல முற்போக்கான கருத்துக்களை இதற்கு முன்பே போப் பிரான்சிஸ் தெரிவித்து இருக்கிறார்.
முக்கியமாக தன் பாலின உறவினர்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் உணர்வுகள் குறித்தும் பல இடங்களில் போப் பிரான்சிஸ் பேசி இருக்கிறார். கிறிஸ்துவம் என்று இல்லாமல் பொதுவாக எந்த மதத்திலும் இருக்கும் பெரும் தலைவர்கள் இதை பற்றி பெரிதாக பேசாத நிலையில் போப் பிரான்சிஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.

போப் பிரான்சிஸ்
அந்த வகையில் வாட்டிகன் திருச்சபையின் வாராந்திர கூட்டத்தில் நேற்று போப் பிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் தன் பாலின உறவு குறித்து அவர் கருத்து தெரிவித்தார். அதில், தன் பாலின உணர்வாளர்களை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை வித்தியாசமாக பார்க்க கூடாது. அது அவர்களின் பாலியல் விருப்பம். இதை சரி, தவறு என்று சொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது.

ஆதரிக்க வேண்டும்
குழந்தைகளை பாலியல் தேர்வுகளை பெற்றோர்கள் அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை அவர்களை பெற்றோர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்க வேண்டும். அவர்களை கண்டிக்க கூடாது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமை. கிறிஸ்தவ திருச்சபை வேண்டுமென்றால் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருக்கலாம்.
ஆதரிக்க வேண்டும்
குழந்தைகளை பாலியல் தேர்வுகளை பெற்றோர்கள் அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் குழந்தைகளை அவர்களை பெற்றோர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்க வேண்டும். அவர்களை கண்டிக்க கூடாது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமை. கிறிஸ்தவ திருச்சபை வேண்டுமென்றால் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருக்கலாம்.

பெற்றோர்
ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் பேசி இருக்கிறார். இதற்கு முன்பே போப் பிரான்சிஸ் இதே போன்ற கருத்துக்களை வெவ்வேறு கூட்டங்களில் பேசி உள்ளார். 2013ல் கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், தன் பாலின ஈர்ப்பு கொண்ட பாதிரியர்களை நான் விமர்சிக்க மாட்டேன். தன் பாலின ஈர்ப்பு கொண்ட ஒரு நபர் கடவுளை வேண்டுகிறார். கடவுளை தேடுகிறார் என்றால் அதை நான் எப்படி தவறு என்று சொல்ல முடியும்.

கடவுளின் குழந்தைகள்
எனக்கு என்ன உரிமை உள்ளது. தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களும், திருநங்கைகள், நம்பிகளும் கடவுளின் குழந்தைகள்தான். உங்களை, என்னை போல அவர்களும் கடவுளின் குழந்தைகள்தான். தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் குடும்பத்தில் வசிக்கும் உரிமைகளை கொண்டவர்கள். தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை சமுதாயத்தில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் வெளியேற்றுவது சரியாக இருக்காது.

சட்டம் தேவை
இதற்கான சட்டங்களை கொண்டு வர வேண்டும். LGBTQ+ பிரிவினரின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இதற்கு ஏற்றபடி சட்டங்களை கொண்டு வர வேண்டும். சட்ட ரீதியாக அவர்களுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். உலகம் முழுக்க இருப்பவர்களின் பார்வை இதில் மாற்றம் அடைய வேண்டும் என்று போப் பிரான்சின் முன்பே கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.