• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆபாச வீடியோவா.. "பிறப்புறுப்பை அறுப்பேன்".. கையில் அரிவாளை எடுத்த வீரலட்சுமி.. தெறிக்க விடும் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: கையில் அரிவாளை எடுத்துவிட்டார் வீரலட்சுமி.. ஆபாச வீடியோ அனுப்பியவர்களை "கட்" செய்ய போகிறாராம்.. புது வீடியோவை போட்டு தெறிக்க விட்டுள்ளார் வீரலட்சுமி..!

  Veeralakshmi-யின் அனல் தெறிக்கும் பேச்சு - அரபு நாட்டு தண்டனை கொடுப்பேன்

  ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி.. 35 வயதாகிறது.. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.. தேசிய தலைவர் பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை, குஷ்பு வீடு முற்றுகை... இப்படி அன்றைய தமிழக பரபரப்பு நிகழ்வுகளின் மூலம் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்தவர்.

  இதற்கு பிறகு தமிழக மக்களின் பல பிரச்சனைகளில் தலையிட்டு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் "மை இந்தியா பார்ட்டி" சார்பிலும் போட்டியிட்டார்.

  ஆடி பொறந்திருச்சு.. அம்மா வீட்டுக்கு அனுப்பணும்.. ஆனா.. பாவம் இந்த 90ஸ் கிட்ஸ் கவலையைப் பாருங்க !ஆடி பொறந்திருச்சு.. அம்மா வீட்டுக்கு அனுப்பணும்.. ஆனா.. பாவம் இந்த 90ஸ் கிட்ஸ் கவலையைப் பாருங்க !

   போட்டி

  போட்டி

  அப்போது, பம்மல் தொகுதியில் தீவிர பிரச்சாரத்திலும் இறங்கினார்.. அந்த சமயத்தில், திடீரென சில வீடியோக்கள் இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.. அவை எல்லாமே ஆபாச வீடியோக்கள் போலும்.. ஆனால், யார் அனுப்பியது என்று தெரியவில்லை.. இதை பார்த்து பதறிய வீரலட்சுமி, போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

  வீடியோ

  வீடியோ

  போலீசாரும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.. அப்போது சிறிது நாளில் மறுபடியும் வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அந்த வீடியோவில் "எனக்கு இப்படி ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

   பிறப்புறுப்பு

  பிறப்புறுப்பு


  அதுமட்டுமல்ல, அப்போதைய தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக தேர்தல் ஆணையர், சென்னை கமிஷனர் ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை வீரலட்சுமி வெளியிட்டிருந்தார்.. இதற்கு பிறகு இப்போது மறுபடியும் லைம்லைட்டில் வந்துள்ளார்.. இவர் சமீபத்தில் மேகதாது அணையை எதிர்த்துபோராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனையில் இருந்தபோது, மறுபடியும் அந்த ஆபாச வீடியோ வந்ததாம்.. இதையும் யார் அனுப்பியது என்று தெரியவில்லையாம்... ஆனால் 2 பேர் அனுப்பி இருக்கிறார்கள்.

   நடவடிக்கை

  நடவடிக்கை

  இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போய் மறுபடியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில், கையில் அரிவாளை எடுத்துவிட்டார் வீரலட்சுமி.. "ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் புகார் தந்தேன்.. ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை.. இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபி நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் "அந்த" மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்" என்று வார்னிங் தந்துள்ளார்..

  விருது

  விருது

  அதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி.. ஏற்கனவே நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பை கட் செய்வதாக சொல்லி இருந்தார் வீரலட்சுமி.. இப்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை வைத்து கொண்டு ரெடியாக நிற்கிறார்.. என்ன ஆக போகிறதோ? தெரியலையே..!

  English summary
  Porn videos issue and K Veeralakshmi again complaint on it
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X