சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தபால்துறை தேர்வை நடத்தலாம்.. ஆனால் முடிவை வெளியிடக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: முடிவுகளை வெளியிட இடைக்கால தடை என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தபால்துறை தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தபால்துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று திட்டமிட்டபடி நடக்கிறது.

மதுரை சொக்சிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தபால்துறை தேர்வு தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் தபால்துறையில் காலியாக உள்ள ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 10ம் தேதி வெளியிடப்பட்டது. தபால்காரர், தபால் உதவியாளர், மெயில் கார்டு, பல்திறன் பணியாளர்கள் உள்பட பல பணிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 postal jobs test on today, only in English, Hindi

இன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்த வேண்டும் என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலானோர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்ற சூழலில் திடீரென ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுவது சிரமம் ஏற்படும். எனவே மத்திய அரசின் அறிவிக்கையை திரும்ப பெற உத்தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா? சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா?

இந்த மனுவை நேற்று இரவு அவசர மனுவாக விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நாளை(இன்று) திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் மத்திய அரசு பதில் அளிக் உத்தரவிட்டு ஜுலை 22ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது

இதனிடையே திட்டமிட்டபடி தமிழகத்தில் தபால்துறை தேர்வுகள் இன்று காலை நடக்கிறது. இந்த தேர்வை சுமார் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

English summary
The postal jobs exams on today, now be only in English and Hindi after HC condition permission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X