சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை... பெரியகுளத்தில் போஸ்டர் கிழிப்பு

சென்னையில் ஓபிஎஸ் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தேனி பெரியகுளத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: என்றென்றும் மக்களின் முதல்வர் ஓபிஎஸ் என்று தேனி பெரியகுளம் அருகே தென்கரையில் ஒ.பன்னீர் செல்வம் வீட்டு அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனது வீட்டில் அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் போஸ்டரை ஒட்டியவர்களே அதை கிழித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதற்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுகவில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின நாளில் விடியும் போதே அதிமுகவில் பரபரப்புதான். கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கையால் விருது வாங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரத்தில் தேனி பெரியகுளத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பை பற்ற வைத்தன.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே இருக்கும் கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர்களில், 'அம்மா ஆசி பெற்ற என்றென்றும் மக்களின் முதல்வர் ஐயா OPS #2021 CM FOR OPS என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தப் போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி,துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி முனுசாமி புகைப்படங்களும் சிறிய அளவில் இடம் பெற்று இருந்தது.

 #2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர் #2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

அமைச்சர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

அமைச்சர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

பரபரப்பு போஸ்டர்கள் கிழிப்பு

பரபரப்பு போஸ்டர்கள் கிழிப்பு

ஒரு புறம் ஆலோசனை நடைபெற்று வரும் இந்த நிலையில், தேனி பெரியகுளம் தென்கரையில் இருக்கும் ஓபிஎஸ் இல்லத்தின் அருகே ஓட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதிமுகவினரிடையே பரபரப்பு நீடிக்கிறது.

அதிமுகவில் என்ன நடக்கிறது

அதிமுகவில் என்ன நடக்கிறது

அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஓ,பன்னீர் செல்வம், முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே போட்டி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துதான் அல்லும் பகலும் அயராது உழைப்பேன் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இன்றைய தினம் துணை முதல்வர் ஓ,பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தியதும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று சொன்ன கே.பி முனுசாமி அன்றைய தினமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தினார். இந்த இரண்டு ஆலோசனைகளால் அதிமுகவில் பரபரப்பு ஏற்படுள்ளது. விரைவில் அதிமுகவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Posters pasted in Theni Periyakulam have been torn down as more than a dozen ministers are consulting at the OPS house in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X