சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் வெல்ல.. பணம் வேணாம்.. இதை செய்யுங்க.. அரசியல்வாதிகளுக்கு வெதர்மேனின் நெத்தியடி அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு பெரிய விஷயமே அல்ல, ஏரிகள், ஆறுகள், இயற்கை, விவசாயம் ஆகியவற்றை பாதுகாத்தாலே போதும் என வெற்றி உங்கள் வசம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் சித்தாந்தத்தை இந்த அரசியல் கட்சிகள் ஏனோ புரிந்து கொள்ளவில்லை?

ஏரிகள், ஆறுகள், இயற்கை, விவசாயம் ஆகியவற்றை பாதுகாத்தாலே போதும். வாக்காளர்கள் உங்களை விரும்புவார்கள். இது ரொம்ப சிம்பிள். வெற்றி பெற இதை விட வேறு எளிதான வழி ஏதும் இல்லை.

பணம் வேண்டாம்

பணம் வேண்டாம்

சாதி ரீதியிலான கூட்டணி தேவையில்லை. மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். கூட்டணியை உடைக்கவும் பணம் கொடுக்க தேவையில்லை என நெத்தி பொட்டில் அடித்தாற்போல் அரசியல்வாதிகளுக்கு வெதர்மேன், அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டணி

பொதுவாக தேர்தல் என்றாலே கூட்டணி, தேர்தல் அறிக்கை, அந்த தேர்தல் அறிக்கையில் இலவசங்கள், இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு ஒரு வோட்டுக்கு இவ்வளவு என பணம், கூட்டணியை உடைக்க செய்யும் சாணக்கியத்தனம் ஆகியவை மூலதனமாக போடப்பட்டு பெரும்பாலான கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

மழை நீர் சேகரிப்பு

எத்தனை பேர் இதுவரை நிறைய செடிகளை நட்டு அவற்றை பெரிய மரங்களாக வைத்துள்ளார்கள்? எத்தனை பேர் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நிறுவியுள்ளார்கள்? அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்பார்ப்பதற்கு முன்னர் வீட்டிலிருந்து நாம் இவற்றை தொடங்க வேண்டும் என ஒரு வலைஞர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள்

கொஞ்சம் நடைமுறைக்கு சாத்தியமா என பாருங்கள். அவற்றை எல்லாம் யார் பாதுகாப்பது? தவறு வாக்காளர்களிடம் உள்ளது. அரசியல்வாதிகள் என்னதான் செய்தாலும் நாம் அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார் ஒரு வலைஞர்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that Why cant political parties understand a simple winning ideology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X