சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமரே என்ன பேசுகிறோம் என புரியாமல் உளறுபவர்களுக்கு மீண்டும் சொல்லி புரியவையுங்கள்.. பிரகாஷ்ராஜ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Prakash Raj follows kamal | ம.நீ.ம தான் ஒரே வழி!.. பிரகாஷ் ராஜ் அசத்தல் யோசனை!- வீடியோ

    சென்னை: பிரதமர் அவர்களே புரியாமல் எதையோ உளறும் பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கு மீண்டும் சொல்லி புரிய வையுங்கள் என பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜின் நண்பர் கௌரி லங்கேஷ் வலது சாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகர் பிரகாஷ்ராஜ் கொண்டுள்ளார். இதையடுத்து பொதுவெளியில் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். இதனிடையே யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியிருந்தார்.

    என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா!என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா!

    தயார்

    தயார்

    அதாவது இந்தியாவின் மக்கள்தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடியை தாண்டக் கூடாது. அதை சமாளிக்கும் அளவுக்கு நாம் தயாராக இல்லை.

    வாக்குரிமை

    வாக்குரிமை

    மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தை பிறப்பை அரசு தடுக்க வேண்டும். அதாவது மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.

    அரசு சலுகை

    அரசு சலுகை

    அது மட்டுமல்லாமல் அந்த 3-ஆவது குழந்தை தேர்தலில் போட்டியிடுவதோ அரசின் சலுகைகளை அனுபவிப்பதையோ அனுமதிக்க கூடாது என கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

    அன்பு பிரதமரே

    பாபா ராம்தேவின் இந்த பேச்சை மேற்கோள்காட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பான பிரதமர் அவர்களே, என்ன பேசுகிறோம் என்றே தெரியாத அளவுக்கு உளறுபவர்களின் நாவை அடக்கி வையுங்கள் என ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தியுள்ளதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

    பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

    பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

    ஆனால் அவர்கள் வாயை மூடுவதாக இல்லை. எனவே மீண்டும் அவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள் என பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Prakash Raj condemns Baba Ramdev's speech on Population and requesting PM ask these motor mouths to stop again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X