சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேர்த்து வைத்த பணத்தை எடுத்தேன்.. பணியாளர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் கொடுத்தேன்.. பிரகாஷ்ராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பீதி காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் தனது பணியாளர்களுக்கு முன் கூட்டியே ஊதியம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ்.

கொரோனா பீதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் முடங்கின. அதாவது கூட்டம் கூட்டமாக செய்யப்படும் அனைத்து தொழில்களும் முடங்கின. அதாவது பெரிய பெரிய தொழிற்சாலைகள், திருப்பூர் பனியன் நிறுவனம், கார் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன.

இதில் முக்கியமான ஒன்று சினிமா படப்பிடிப்புகள். கொரோனா பரவலைத் தடுக்க சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல தொழிலாளர்கள் வேலையின்றி ஊதியமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி கொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி

ஊதியம்

ஊதியம்

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை, வீட்டுப் பணியாளர்கள் என எல்லாருக்கும் மே மாதம் வரைக்குமான ஊதியத்தை முன் கூட்டியே கொடுத்துவிட்டேன்.

முயற்சி

முயற்சி

அது போல் இந்த படப்பிடிப்பு நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்ட எனது 3 படங்களிலும் பணியாற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் பாதி ஊதியத்தையாவது கொடுக்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன். நீங்களும் உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

தவிப்பு

நாம் வாழும் வாழ்க்கைக்குத் திரும்பத் தர வேண்டிய தருணமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது என பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரகாஷ் ராஜை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த சினிமா படப்பிடிப்புகள் கடந்த 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் ஏராளமான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் உதவி

நடிகர் சிவகார்த்திகேயன் உதவி

இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவக்குமாரும், அவரது மகன்களும் இணைந்து ரூ 10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 10 லட்சமும் என மொத்தம் ரூ 20 லட்சம் வழங்கியுள்ளனர். இன்னும் பல நடிகர், நடிகைகள் இந்த நலிந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பப்படுகிறது.

English summary
Actor Prakash Raj says that he paid advance salaries to all his farm, film productiion and personal staffs upto month of May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X