சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியலில் குதிக்கும் பிரகாஷ்ராஜ்... தயாரிப்பாளர் சங்க பதவியை உதறுவாரா?

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் சங்க பதவியை உதறுவாரா?

    சென்னை: அரசியலில் குதிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ரஜினி, கமலுக்கு பிறகு அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் ஒரு நடிகர் என்றால் அவர் பிரகாஷ் ராஜ். இவரது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவரது கோபம் வலது சாரிகள் பக்கம் வீரிட்டெழுந்துள்ளது.

    இந்நிலையில் அவர் கடந்த 1-ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு தான் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

    விஷாலுக்கு

    விஷாலுக்கு

    தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவராக உள்ள இவர் அப்பதவியை துறந்துவிட்டு போட்டியிடுவாரா, அல்லது அப்பதவியில் இருந்து விலக மறுத்து தேர்தலிலும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது விஷாலுக்கு ஏற்பட்டது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ள விஷால் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரில் எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசை எதிர்த்து விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தமிழக அரசால் சினிமா துறைக்கு எவ்வித நன்மையும் கிடைக்காத நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    வேண்டுமானால் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிறகு எந்த தேர்தலில் வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும் என்று போர்க் கொடி உயர்த்தினர். இறுதியில் விஷால் எதிர்ப்பை மீறி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும் அவரது வேட்புமனு செல்லாமல் நிராகரிக்கப்பட்டதும் வேறு கதை.

    போட்டியிடுவார்

    போட்டியிடுவார்

    எனவே இந்த நிலை பிரகாஷ் ராஜுக்கு வருமா. இல்லை அவர் வேறு மாநிலத்தில்தானே போட்டியிடுகிறார் என எதிர்ப்புகள் கிளம்பாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் துணை தலைவர் பதவியில் இருந்தாலும் பிரகாஷ் ராஜ் செயல்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்தான் இன்னொரு துணை தலைவராக பார்த்தீபன் நியமிக்கப்பட்டார். எனவே பிரகாஷ் ராஜே பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Prakash Raj will resign his Producer Association's deputy chief post? as the association members demands Vishal to do so while he tried to contest in RK Nagar Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X