சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்படுகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் நடிகர் விவேக் இறப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்! கொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஊசி போட்டுக் கொண்டார். அவரது இறப்பில் வதந்திகளை பரப்ப வேண்டாம். அவரது ஆன்மா சாந்தியடைய வதந்தி பரப்பாமல் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள்.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

கொரோனா தடுப்பூசி குறித்தும் நடிகர் விவேக் இறப்பு குறித்தும் யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

கொரோனா

கொரோனா

தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ். கொரோனா தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள வேண்டாம் என வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டதால் அவர் மீது புகார் அளிக்கப்படுகிறது.

English summary
Chennai Municipal Commissioner Prakash says that no dine in will be allowed in Hotels, only parcels will be allowed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X