சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர் பதவி... ஜி.கே.வாசனுக்கு பிரனாப் முகர்ஜி பரிந்துரை..?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை மத்திய அமைச்சராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

மூப்பனார் காலம் தொட்டே அவர் மீதும் அவரது மகனான ஜி.கே.வாசன் மீதும் பிரனாப் முகர்ஜிக்கு நல்ல அபிப்ராயமும், நெருக்கமும் உண்டு.

இந்நிலையில் பிரனாப் முகர்ஜி காங்கிரஸ் பின்னணியை கொண்டவராக இருந்தாலும், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் பிரதமர் மோடியுடனும், ஆர்.எஸ்.எஸ்.தலைமையுடன் நெருக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி!10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி!

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை பாஜகவில் இணைத்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என அக்கட்சியின் தேசியத் தலைமை எண்ணிய நிலையில், வாசனிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மறுப்பு

மறுப்பு

ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சராக ஆசை இருந்தாலும், கட்சியை கலைத்துவிட்டு முழுவதுமாக பாஜகவில் இணைய அவர் தயங்குகிறார். இதனால் அவர் பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்து இன்னும் பிடிகொடுக்காமல் யோசனை செய்து வருகிறார்.

சிபாரிசு

சிபாரிசு

ஆனால் அதே நேரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்காமல் ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுத்தர முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி முயற்சி செய்கிறாராம். அவர் பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும், பிப்ரவரியில் நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில் வாசன் இடம் பிடித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

யார் யார்?

யார் யார்?

ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவியை கைப்பற்ற தேனி எம்.பியும்., ஓ.பி.எஸ்.மகனுமான ரவீந்தரநாத் குமார் தீவிரமாக உள்ளார். மேலும், பாஜக தரப்பில் சி.பி.ராதாகிருஷ்ண மாநிலங்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சராகும் திட்டத்தில் உள்ளார். இதில் யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்பது பிப்ரவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

English summary
Pranab Mukherjee recommends central minister post for gk vasan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X