சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை தேர்தல்.. அதிமுக, மநீமவுக்கு நிலவர ரிப்போர்ட்.. ஆளுக்கு ஒரு "சிசி".. பலே பிரசாந்த் கிஷோர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை தேர்தல் : அதிமுக, மநீமவுக்கு நிலவர அறிக்கை அளித்தார் பிரசாந்த்- வீடியோ

    சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக, மநீமவுக்கு களநிலவர அறிக்கை தர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியை தேடி தந்துள்ளன. இதனால் தேர்தல் காலம் என்றாலே பிரசாந்த் கிஷோர் பெயர் அடிபடாமல் இருப்பது இல்லை.

    ஸ்டாலின் பிரசாரங்கள்

    ஸ்டாலின் பிரசாரங்கள்

    தமிழகத்தில் திமுகதான் பிரசாந்த் கிஷோரை முதலில் பயன்படுத்தியது. மு.க.ஸ்டாலினின் பல்வேறு மக்களை சென்றடையும் பிரசார வியூகங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.

    ஜெகன், மமதா

    ஜெகன், மமதா

    லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் விஸ்வரூப வெற்றிக்கும் கிஷோர்தான் காரணம். இதனையடுத்து 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை ஏற்று பல்வேறு அறிவிப்புகள், நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கமலுடன் ஆலோசனை

    கமலுடன் ஆலோசனை

    2021-ல் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்திலும் பிரசாந்த் கிஷோரை இழுப்பதில் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் கணிசமான வாக்குகளை அள்ளியது மக்கள் நீதி மய்யம். இதனால் சட்டசபை தேர்தலிலும் பலத்தை வெளிப்படுத்த பிரசாந்த் கிஷோரை சென்னைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் கமல்ஹாசன்.

    களநிலவர அறிக்கை

    களநிலவர அறிக்கை

    இன்னொரு பக்கம் ஆளும் அதிமுகவும் பிரசாந்த் கிஷோருக்கு வலை வீசி காத்திருந்தது. தற்போது இரு கட்சிகளுக்குமே களநிலவரத்தை பற்றிய அறிக்கை தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே பிரசாந்த் கிஷோரை பயன்படுத்திய திமுக இந்த விவகாரங்களை நமுட்டுச் சிரிப்புடன் கடந்து செல்கிறது.

    என்ன உள்குத்தோ?

    English summary
    Poll strategist Prashant Kishor will work for AIADM and Kamal Haasan's MNM for Tamilnadu Assembly elections 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X