சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரசாந்த் கிஷோர் தந்த ஐடியா.. கடைசி நேரத்தில் கழன்று கொண்ட மநீம.. கமலின் முடிவிற்கு இதுதான் காரணமா?

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவிற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... பிடிவாதம் பிடிக்கும் கமல்

    சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவிற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதன்படி எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.

    உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்! உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்!

    என்ன காரணம்

    என்ன காரணம்

    முதலில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றுதான் கூறப்பட்டது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டது . ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் முடிவு செய்யுள்ளது. அக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    உள்ளாட்சி பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருக்கும் பலம் குறித்து நேற்று கமல்ஹாசனிடம் பிரசாந்த் விளக்கி உள்ளார். அங்கு மக்கள் எப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியை பார்க்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத விஷயம். அது கட்சிக்கு இருக்கும் ஆதரவாளர்களை குறைக்கும்.

    தோல்வி அடைந்தால்

    தோல்வி அடைந்தால்

    அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், அது தொண்டர்களை கட்சி மாற வைக்கும். சட்டசபை தேர்தல்தான் உங்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனால் அதை மட்டும் செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல், உள்ளாட்சி கட்சி உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

    கட்சி எப்படி

    கட்சி எப்படி

    அதேபோல் உங்கள் கட்சி புதியது, உங்களிடம் நிதி குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிக நிதி செலவாகும். இன்னும் இரண்டு வாரங்களில் அவ்வளவு நிதியை கண்டிப்பாக திரட்ட முடியாது. அதனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

    கடைசி நேரம்

    கடைசி நேரம்

    இதனால் கடைசி நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் பின்வாங்கியது என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை வகுக்க தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Prashant Kishore is the mastermind behind Kamal's eleventh-hour pulling from the local body election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X