சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கா, நானா.. அப்படில்லாம் இல்லை.. அதெல்லாம் பொய்.. அழுத்தமாக மறுக்கும் பிரஷாந்த் கிஷோர்

அதிமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைக்கவில்லை என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Prashanth Kishore : அதிமுகவின் ஆலோசகர் தொடர்பான வதந்தி... பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - வீடியோ

    சென்னை: அதிமுகவுக்கு நான் தேர்தல் வியூகம் அமைத்து தரவில்லை என்று பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதில் வல்லவர். ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.

    நான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்! நான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்!

     விசுவாசம்

    விசுவாசம்

    யாருக்காக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார். ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர். தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார். இவர் அமைத்து தந்த வியூகம் மூலம் உச்சத்தை தொட்டவர்கள் பிரதமர் மோடி முதல் ஜெகன்மோகன் ரெட்டி வரை பரவி உள்ளன.

     அதிமுக

    அதிமுக

    சமீபத்தில், தேர்தல் தோல்வியில் நொந்து போய் இருந்த, தமிழக முதல்வர் இவரை நேரில் சந்தித்து நிறைய பேசியதாகவும் 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தம் போடப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

     ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஆனால் இந்த செய்தி எழும்போதே இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்பட்டது. இதற்கு காரணம், பிரஷாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நெருக்கம் உள்ளது என்பதால்தான். இதனிடையே கமல்ஹாசன் சென்று பிரஷாந்த்தை சென்று சந்திக்கவும் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆலோசகர் ஆக போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

     முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    இப்போது அனைத்து யூகங்களுக்கும் பிரஷாந்த் கிஷோர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, அதிமுகவுக்காக தேர்தல் வியூகம் அமைத்து தருவதாக பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார். இதை பற்றி அவர் சொல்லும்போது, "நான் நிறைய பேரை சந்தித்து பேசுகிறேன். அதனாலேயே அவர்களுக்காக வியூகங்களை வகுத்து தர போகிறேன் என்று சொல்ல முடியுமா?

     கேள்வி

    கேள்வி

    அதிமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக எந்த பேச்சும் நடக்கவில்லை. இது தொடர்பாக வந்த செய்திகள் எல்லாம் பொய்யானவை... தவறானவை.. ஒரே நேரத்தில் எப்படி ஒரு மாநிலத்தை சேர்ந்த 2 கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து தர முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் கிஷோர்.

     திமுக?

    திமுக?

    இதையேதான் நேற்றுமுன்தினம் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சி அதிமுக. அதனால் யாரையும் நம்பி நாங்கள் இல்லை" என்றார். அதிமுகவுக்காக தேர்தல் வியூகம் இல்லை என்று உறுதியாக கிஷோர் சொல்லிவிட்டார். அப்படியானால், பிரசாந்த் கிஷோர் என்ற பிரம்மாஸ்திரத்தை முழுமையாக தன்வசப்படுத்துவது, வழக்கம்போல திமுகவாக இருக்குமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Prashanth Kishore says that "I have not set up an election strategy for the AIADMK and MNM"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X