சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு ஏதும் இல்லை- பிரதாப் ரெட்டி

Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது நான் உடனிருந்தேன் என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

Prathap Reddy says that no defect in treatment given to Jayalalitha

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகின.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை.

எய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம்எய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம்

அவருக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த போது 4 வாரங்கள் நான் உடன் இருந்தேன் என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

English summary
Apollo Chariman and Managing Director Prathap Reddy says that he was with Jayalalitha for 4 weeks while she was being treated in his hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X