சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்கனுமா? நிர்வாகிகளை எகிறிய பிரேமலதா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்க வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகள் மீது கோபத்தை காட்டியிருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

லோக்சபா தேர்தலின் போது அதிமுக, திமுகவுடன் ஒரே நேரத்தில் பேரம் பேசி மூக்குடைபட்டது தேமுதிக. வேறுவழியே இல்லாமல் அதிமுகவிடம் சரணாகதி அடைந்தது.

Premalatha comments on Rajya Sabha Seat

ஆனால் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது தேமுதிக. தேர்தலில் வென்று மத்திய அமைச்சராகிவிடலாம் என கனவு கண்ட சுதீஷும் தோல்வியைத் தழுவினார்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தோல்விகள் தொடர்வதால் தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏற்கனவே அக்கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களாக இருந்தவர்கள் வெளியேறிவிட்டனர்.

தற்போதைய நிலையில் விஜயகாந்த் குடும்பம் மட்டும்தான் தேமுதிகவில் ஆக்டிவ்வாக இருக்கிறது. இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு??அதிமுகவின் திடீர் ஜகா.. இனியும் தூக்கி சுமக்க தயாரில்லை.. பாமகவுக்கு ராஜ்யசபா சீட் மறுப்பு??

இதில் பேசிய நிர்வாகிகள் சிலர், அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு பெறலாம் என வலியுறுத்தியிருக்கின்றனர். இதில் பிரேமலதா மிகவும் கடுப்பாகிவிட்டாராம்.

பாமகவுக்கு 1 ராஜ்யசபா சீட் கண்டிப்பாக தருகிறோம் என எழுதிக் கொடுத்தது அதிமுக. ஆனால் இப்போது பாமகவுக்கே சீட் இல்லை என்கிறது அதிமுக. இதில் நாம் எப்படி போய் எங்களுக்கு 1 சீட் தாங்கன்னு கேட்க முடியும்? எனனாந்த நிர்வாகிகளிடம் எகிறினாராம் பிரேமலதா.

English summary
DMDK Treasurer Premalatha told her party senior leaders not to asking One Rajya Sabha seat from AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X