சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதி... பிரேமலதாவின் சர்ச்சை பேச்சால் ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ பற்றி பிரேமலதா சர்ச்சை பேச்சால் ஷாக்-வீடியோ

    சென்னை: சென்னை இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் அப்போது லாரி வந்ததும் விதி... அதிமுக பேனர் என்பதற்காகவே பெரிதுபடுத்துகின்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    அதிமுக பிரமுகர் ஜெயபால் வீட்டு திருமணத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இச்சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    Premalathas controversial speech on subashree death

    இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பேனர் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன. சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கடுமையை வெளிப்படுத்தி வருகிறது.

    ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அலட்சியமாக பேசியிருந்தார். அதிமுக பேனர் என்பதால்தான் பிரச்சனையாக்குகிறார்கள் என கூறியிருந்தார். அவரது இப்பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த பேச்சு பேசிவிட்டு சுபஸ்ரீ வீட்டுக்கு போய் ஆறுதலும் கூறினார் விஜயபிரபாகரன். தற்போது அவரது தாய் பிரேமலதா இன்னும் ஒருபடி மேலேபோய் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பேசியிருக்கிறார்.

    அமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்அமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்

    சென்னை ஆவடியில் விஜயகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நேற்று இரவு பேசிய பிரேமலதா, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் விதி.. அப்போது லாரி வந்ததும் விதி என ரொம்பவும் அலட்சியாமகவே கூறியிருக்கிறார். மேலும் அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதனை பெரிதாக்குகிறார். சுபஸ்ரீ மரணம் என்பது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்துதான் எனவும் பேசியிருக்கிறார்.

    இந்த பேச்சுகளையும் கேட்க வேண்டும் என்பது தமிழகத்தின் விதி!

    English summary
    DMDK Treasurer Premalatha's speech on subashree death created a new controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X