சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் சொத்து..! பரபரப்பு தகவல்கள்

    சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி நிர்வாகிகளிடம் நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் பிரேமலதா. இதற்காக கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இனியும் கட்சிக்கு செலவு செய்ய முடியாது.. பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்து கொள்கிறோம் என தடாலடியாக நிர்வாகிகள் கூறியதால் அதிர்ந்து போனாராம் பிரேமலதா.

    விஜயகாந்தின் வீடு, கல்லூரி அனைத்தும் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது. இது அரசியல்வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    லோக்சபா தேர்தலின் போது அதிமுக-பாஜக கூட்டணியிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்தது விஜயகாந்த் குடும்பம். ஆனால் டோக்கன் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து கழற்றிவிட்டனர்.

    நகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம் நகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம்

    ஏலத்தில் சொத்துகள்

    ஏலத்தில் சொத்துகள்

    இந்நிலையில் சொத்துகளை ஏலம் விடுவதாக வங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ5 கோடி கடனுக்காக ரூ100 கோடி சொத்துகளையா ஏலம் விடுவார்கள்? இதில் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது என பலரும் பிரேமலதா மீது சந்தேகப் பார்வையை வீசினர்.

    தேமுதிக கூட்டம்

    தேமுதிக கூட்டம்

    இந்நிலையில் திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. காணாமல் போய் கொண்டிருக்கும் கட்சியின் களநிலவரம் குறித்து விஜயகாந்திடம் சொல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஆறுதலடைந்து சென்னைக்கு வந்தனர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்.

    பிரேமலதாவின் பேச்சால் அதிருப்தி

    பிரேமலதாவின் பேச்சால் அதிருப்தி

    ஆனால் விஜயகாந்த் கூட்டத்துக்கு வரவே இல்லை. பிரேமலதாதான் இந்த கூட்டத்தை நடத்தினார். இதனால் செம கடுப்பில் இருந்த நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாகவும் பிரேமலதா பேசினார். இவர் எதற்காக அடிபோடுகிறார் என்பதை புரிந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், எந்த தேர்தல் செலவுக்கும் கட்சி தலைமை பணம் தருவதே இல்லை. அத்தனை பேரும் கடனை வாங்கி சொத்துகளை விற்றுதான் செலவு செய்தோம்.

    நிதி திரட்ட முடியாது

    நிதி திரட்ட முடியாது

    இப்ப உங்க சொத்துகளை மீட்க எங்களை நிதி வசூல் செய்து தர சொன்னால் எப்படி? எங்களுக்கு கட்சியே வேண்டாம்... சேலத்து கவுன்சிலர் வேட்பாளர் போல பெட்டிக் கடை வைத்து பிழைக்கிறோம் என முகத்தில் அறைந்தது போல பேசிவிட்டனர். இதனால் நொந்து போய்விட்டாராம் பிரேமலதா.

    அடாவடித்தனமான விஜயபிரபாகரன்

    அடாவடித்தனமான விஜயபிரபாகரன்

    இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். அவரது அடாவடி பேச்சும் அடங்குவதாக இல்லை. கல்வி சேவை செய்தே விஜயகாந்த் கடனாளியாகிவிட்டார்; அதனால் நிதி திரட்டி தாருங்கள் என மேலோட்டமாக பேசி நிர்வாகிகளை நம்ப வைத்து கொண்டிருக்கிறாராம் விஜய பிரபாகரன்.

    English summary
    DMDK Deputy general secretary Premala shocked over the party senior leaders comments on fund collection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X