சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 5 ஆண்டுகள் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை. எனவே இம்முறையும் கிடைக்க போவதில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. ஆயினும் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் சென்னையில் திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா சந்தித்தார்.

கேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு?.. என்ன துறை? கேட்டது கிடைக்கிறது.. பாஜகவில் கம்பீருக்கு முக்கிய அமைச்சரவை ஒதுக்கீடு?.. என்ன துறை?

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

அப்போது அவர் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை. அது போல் இந்த 5 ஆண்டுகளுக்கும் எந்தவித பலனும் தமிழகத்துக்கு கிடைக்க போவதில்லை.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏன் என தெரியவில்லை. தேர்தலில் கடந்த இரண்டு முறை தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால் சின்னம் முடக்கப்படாது.

தமிழகம்

தமிழகம்

நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்றார் பிரேமலதா. இந்த பேட்டியில் சந்தடி சாக்கில் அதிமுக, பாஜகவை பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணி அமைவதற்கு முன்னர் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக எம்பிக்களால் எந்த நன்மையும் தமிழகத்துக்கு இல்லை என்று கூறினார்.

சலசலப்பு

சலசலப்பு

இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைந்தவுடன் இதை தான் ஏன் தெரிவித்தார் என்ற பூசி மெழுகும் காரணத்தை கூறினார பிரேமலதா. இந்த முறை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் எம்பிக்களையும் பாஜக அரசையும் விமர்சனம் செய்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Premalatha Vijayakant indirectly criticises ADMK EX MPs in her pressmeet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X