சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா

Google Oneindia Tamil News

Recommended Video

    Premalatha Vijayakanth :நாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. பிரேமலதா அறிவிப்பு- வீடியோ

    சென்னை: நாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருந்தது.

    இந்த நிலையில் விஜயகாந்தை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.

    ஏதோ நினைத்து.. பேசக் கூடாததை பேசி இப்படி சிக்கிக்கொண்டாரே மோடி! ஏதோ நினைத்து.. பேசக் கூடாததை பேசி இப்படி சிக்கிக்கொண்டாரே மோடி!

    செய்தியாளர்கள் சந்திப்பு

    செய்தியாளர்கள் சந்திப்பு

    சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோடை கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    அவர் கூறுகையில் தேர்தலுக்கு பிறகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மக்கள் பணியில் முழு கவனம் செழுத்துவார்கள். மோடி அரசு மீண்டும் மத்தியில் ஆளும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தொடரும். தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவுகள் அறிவித்தால் இந்த குழப்பம் இருக்காது. இத்தனை நாட்களாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பிரச்சாரம் செய்து வந்தனர்.

    நிலத்தடி நீர்

    நிலத்தடி நீர்

    எப்போதுமே கிளைமேக்ஸில் பிரச்சாரம் செய்தால்தான் ரீச்சாகும் என்பதால் நான் நாளை முதல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளேன். தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இருந்து வருகிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது.

    தூர்வார்தல்

    தூர்வார்தல்

    தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். தமிழகத்திலுள்ள நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழைநீர் தேங்க வழி செய்ய வேண்டும். மேலும் நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார் பிரேமலதா.

    English summary
    Premalatha Vijayakant says that he will start her campaign for ADMK by tomorrow. Last minute campaign will reach people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X