சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருமானத்துக்கே வழி இல்லை.. சாதாரண 5சி மேட்டர்தான்... பிரேமலதா கேசுவல் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    Premalatha Vijayakanth : கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்- பிரேமலதா- வீடியோ

    சென்னை: கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்.. வங்கி கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக அணுகுவோம்... இது ஒரு சாதாரண 5சி (ரூ5 கோடி) விவகாரம் என தேமுதிக துணை பொதுச்செயலர் பிரேமலதா படுகேசுவலாக தெரிவித்துள்ளார்.

    விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை கடனுக்காக ஏலம் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டது. வெறும் 5 கோடி ரூபாய்க்கு விஜயகாந்தின் ரூ100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை ஏலம் விடுவது என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தானம், தருமம் என வழங்கிய விஜயகாந்துக்காக இந்த நிலைமை என தமிழகம் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அதே நேரத்தில் அரசியல் பேராசையால் விஜயகாந்த் குடும்பத்தினரால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்கிற கோபமும் வெளிப்பட்டு வருகிறது.

    வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை! வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை!

    வருவாய் இல்லை

    வருவாய் இல்லை

    இந்நிலையில் சென்னையில் பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சேவை மனப்பான்மையுடன் ஆண்டாள் அழகர் கல்லூரியை நடத்தி வருகிறோம். எங்களது திருமண மண்டபமும் இடிக்கப்பட்டது. விஜயகாந்தும் சினிமாவில் நடிக்கவில்லை. இதனால் எங்களுக்கு வருமானத்துக்கு வழி இல்லை.

    அட்மிஷனும் குறைவு

    அட்மிஷனும் குறைவு

    இந்த சூழலில் அட்மிஷனும் கல்லூரியில் குறைந்துவிட்டது. ஆகையால் கல்லூரியை மேம்படுத்துவதற்காக வங்கியில் கடன் வாங்கினோம். இது வெறும் 5சி மேட்டர்தான்..

    கடனை எதிர்கொள்வோம்

    கடனை எதிர்கொள்வோம்

    இந்த கடன் பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கடன் பிரச்சனையை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம்,

    கல்லூரி மீட்கப்படும்

    கல்லூரி மீட்கப்படும்

    விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம். தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் இருக்கின்றன. நேர்மையானவர்களுக்கு சோதனை வரும். ஆனால் கடவுள் அவர்களை கைவிடமாட்டார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    இருப்பினும் கல்லூரியை மேம்படுத்த குடியிருக்கும் வீட்டையா அடகு வைப்பார்கள்? என்கிற கேள்வி தொக்கி நிற்கவே செய்கிறது.

    English summary
    DMDK Deputy General Secretary Premalatha Vijayakanth clarified on their proerties to auction by Bank.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X