சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடதான் இருந்தாரா.. பிரேமலதா பொளேர் கேள்வி!

திமுக காலத்தில் சபாநாயகர் சரியாக இருந்தாரா என்று பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "திமுக காலத்துல சபாநாயகர் சரியா இருந்தாரா? நடுநிலைமையோடுதான் இருந்தாரா?" என்று திருப்பி போட்டு கேள்வி எழுப்பி உள்ளார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மே தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. கட்சி கொடியை விஜயகாந்த்துடன் சேர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஏற்றி வைத்தார்.

Premalatha Vijayakanth has questioned, DMK regime Was the speaker Neutral

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பேசியதாவது: எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். இப்ப எதிர்க்கட்சியா இருக்கிறவங்க ஆளுங்கட்சி மேல சொல்ற குற்றச்சாட்டு.

இதில் எது உண்மை, பொய் என்பதை நிரூபிக்க வேண்டியது சபாநாயகரும், தேர்தல் ஆணையமும்தான். குற்றச்சாட்டை சொல்றதால மட்டும் ஒருவர் குற்றவாளி ஆயிட மாட்டாங்க. திமுக ஆட்சி காலத்துல சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறிதான்.

பளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ் பளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ்

அதேபோல, பொன்பரப்பியில் சாதி மோதலை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதலை தூண்டி விட்டு யாரும் ஆதாயம் தேடக்கூடாது. 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்ய போகிறேன். அதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

English summary
DMDK Treasurer Premalatha Vijayakanth questioned, "DMK regime Was the speaker Neutral?"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X