சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி வெறும் அம்புதாங்க.. அவரை யாரோ இயக்குகிறார்கள்.. துக்ளக் விழாவில் இதையா பேசுவது?.. பிரேமலதா

Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதை அவர் தவிர்த்திருந்திருக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு திருவள்ளூரில் உள்ள வீர ராகவ பெருமாள் கோயிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தை அமாவாசையையொட்டி இந்த கோயிலில் தரிசனம் செய்ய வந்தேன்.

ரஜினி பேச்சு: 50 ஆண்டுக்குப் பின் பெரியாருக்கு எதிர்ப்பு- சேலத்தில் ராமர் ஊர்வலம்- 50 பாஜகவினர் கைதுரஜினி பேச்சு: 50 ஆண்டுக்குப் பின் பெரியாருக்கு எதிர்ப்பு- சேலத்தில் ராமர் ஊர்வலம்- 50 பாஜகவினர் கைது

ரஜினி

ரஜினி

தந்தை பெரியார் யார் என்பது தமிழகம் மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து பேசி தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் குறித்த பேச்சை ரஜினி காந்த் தவிர்த்திருக்கலாம்.

துக்ளக் விழா

துக்ளக் விழா

பெரியார் பெண்களுக்காக புரட்சிக்கரமான கருத்துகளை கூறி சரித்திரம் படைத்துள்ளார். அவரை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. துக்ளக் விழாவிற்கு சென்ற ரஜினி காந்த் அந்த பத்திரிகை குறித்து மட்டும் பேசியிருக்க வேண்டும். ரஜினி காந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள்.

மாநில அரசு

மாநில அரசு

இது போன்ற பேச்சுகளை இனிமேலாவது அவர் தவிர்க்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. பாதுகாப்பான வாழ்க்கை கொண்டு வாழ இச்சட்டம் உதவும் என கிராமங்கள் வரை மத்திய அரசும், மாநில அரசும் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

சரித்திரம்

சரித்திரம்

அவ்வாறு செய்தால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள். நாம் என்ன செய்ய போகிறோம் என இன்றைய அரசியல் சூழலில் இருப்பதை பற்றி பேச வேண்டும். பெரியார் சரித்திரமாய் இருந்து சகாப்தம் படைத்தவர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

English summary
Premalatha Vijayakanth says that Rajinikanth would have avoided talks about Periyar in Tuglaq function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X