சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்.வி. சேகர் மேல போட்ட கேஸ் பத்தி கேட்டா.. ஸ்டாலின் மீது பாய்கிறாரே பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்டாலினுக்கு ஒரு நியாயம், எஸ்வி சேகருக்கு ஒரு நியாயமா என்று பிரேமலதா கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஸ்டாலினுக்கு ஒரு நியாயம்? எஸ்வி சேகருக்கு ஒரு நியாயமா" என்று பிரேமலதா விஜயகாந்த் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.. தேசிய கொடி அவமதித்ததாக சொல்லப்பட்ட புகாரில் பிரேமலதா இவ்வாறு செய்தியாளர்களிடம் கேட்டார்.

"எஸ்வி சேகர் ஒரு வீடியோ போட்டு, "தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.. காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், அந்த களங்கமான தேசிய கொடியைத் தான் ஆகஸ்டு 15ம் தேதி ஏற்றப்போகிறாரா?

தேசிய கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா?" என்று கேட்கவும், உடனே இவர் மீது வழக்கு பதியப்பட்டது.. அது சம்பந்தமாக ஹைகோர்ட்டில் விளக்கம் அளிக்கும்போதுகூட, "காந்தி சொன்னதை தான் நானும் சொன்னேன்" என்று வாதிடப்பட்டது.

கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற.. கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்குமா தமிழக அரசு?கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற.. கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்குமா தமிழக அரசு?

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

எஸ்வி சேகரை போலவே திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் ஒரு வழக்கு பதிவானது.. அதாவது அறிவாலயத்தில் கொடி ஏற்றும்போதும், இறக்கும்போதும், ஸ்டாலின் மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை... கையில் கிளவுஸ் போட்டிருந்தார்.. தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்" என்று கமிஷனர் ஆபீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரை தந்தது அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்எம் பாபு முருகவேல்!

 தேசிய கொடி

தேசிய கொடி

இதைதான் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டு இன்று கேள்வி எழுப்பி உள்ளார்.. சென்னையில் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்வி சேகர்மீது வழக்கு தொடரப்பட்டது... அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அறிவாலயம்

அறிவாலயம்

எஸ்வி சேகருக்கு ஒரு நியாயம்.. ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதன்முறையாக அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார்கள்... அவர் உட்பட, அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை... அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

 பதில் வேண்டும்

பதில் வேண்டும்

தேசிய கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

 யோசனை

யோசனை

பிரேமலதா கேட்டது சரியான கேள்வியே.. அதேசமயம், பொதுப்படையாக பார்த்தால், இது தேசிய கொடி அவமதிப்பு சம்பந்தப்பட்டதுதான் என்றாலும், இரண்டுமே வேறு வேறு வகையில் தவறானதே! பிரேமலதா பேச்சில் இன்னொரு விஷயமும் யோசனையை கிளப்பி உள்ளது.. பாஜக-அதிமுகவுடன் லேசான உரசல் தமிழகத்தில் இருந்து வருகிறது.. இதே எஸ்வி சேகரை அதிமுக தரப்பு கண்டித்ததும் அதற்கு ஒரு உதாரணம்தான்.

 எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

அப்படி இருக்கையில், பாஜகவின் எஸ்வி சேகருக்கு பிரேமலதா சப்போர்ட் செய்வது எதனால் என்று தெரியவில்லை.. இத்தனைக்கும் இவர்கள் எல்லாருமே ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.. அதேபோல, தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதால், திமுகவை இனி உண்டு இல்லை என செய்துவிடுவார் என்றும் தெரிகிறது!

English summary
Premalatha Vijayakanth speaks about Sve Sekhar and MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X