சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐதராபாத் என்கவுண்டர்... மக்கள் கருத்து

    சென்னை: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
    கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடக்காத வகையில் திமுக தடுத்தது. திமுக தோல்வி பயத்தின் காரணமாக செய்கிறார்களா இல்லை வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.

    உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் நடக்கும் என்று சொல்லி உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதிமுகவுடனான கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    என்கவுன்ட்டர்

    என்கவுன்ட்டர்

    அதிமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேச தேமுதிக குழு அமைத்து உள்ளது. அது போல் அதிமுகவும் குழு அமைத்தபின் அந்த குழுவுடன் பேசி எந்தந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வோம். தெலுங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது.

    நீதி

    நீதி

    இது போன்று கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் என்ற நிலை வரும். யார் தவறு செய்தாலும் தண்டனைக்குரியவர்கள் தான். யார் தவறு செய்தாலும் ஒரே நீதியுடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    பொதுமக்களுக்கு பாதிப்பு

    பொதுமக்களுக்கு பாதிப்பு

    வெங்காயம் விலை உயர்வு கடுமையாக உள்ளது. ஒரு சீசனில் வெங்காய விலை உயரும் மற்றொரு சீசனில் வெங்காய விலை இல்லாமல் இருக்கும். வெங்காய விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பாக உள்ளது.

    குறைந்த விலையில் வெங்காயம்

    குறைந்த விலையில் வெங்காயம்

    இதை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    DMDK Treasurer Premalatha Vijayakanth says that encountering 4 rape accused is not wrong. If laws are severe then only women would be safe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X