சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே!

தமிழிசை சவுந்தராஜனுக்கு பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை எந்த மாநில கவர்னர்.. பிரேமலதாவுக்கு தெரியலையே! -வீடியோ

    சென்னை: "எங்க தெருக்கு பக்கத்து தெருதான் தமிழிசையின் வீடு.. அவங்க என் பெஸ்ட் பிரண்டுதான்" என்று தமிழிசையை வாய் நிறைய பாராட்டிய பிரேமலதா, எந்த மாநிலத்துக்கு அவர் ஆளுநராக போக போகிறார் என்பது கூட தெரியாமல் கருத்து சொல்லி உள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது!

    வழக்கமாக முன்பெல்லாம் விஜயகாந்த்தான் தாறுமாறாக பேசி கொண்டிருப்பார். இதை பெரும்பாலும் ரசித்தோமே தவிர, அதை பெரிசாக எடுத்து கொண்டு கோபப்படவில்லை.

    விஜயகாந்த் உளறி பேசினாலும், அவரை யாருமே வெறுக்கவும் இல்லை. ஆனால் தெளிவான, படித்த, விவரம் அறிந்த, பெண்ணான பிரேமலதாவும் இப்படி பேச ஆரம்பித்துவிட்டதுதான் தேமுதிகவினருக்கு கவலையாகிவிட்டது.

    பெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசைபெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசை

    பிரேமலதா

    பிரேமலதா

    2016ம் ஆண்டு பிரேமலதாவின் பிரச்சாரம் மோடி வரை நன்கு கவனிக்கப்பட்டது. இவ்வளவு துல்லிய விவரமாகவும், துணிச்சலாகவும் பேசுகிறாரே பிரேமலதா என்று குட்புக்கில் இடம்பெற்றவரும்கூட.

    சொதப்பல்

    சொதப்பல்

    ஆனால் இந்த முறை பிரச்சாரத்தில் அவ்வளவும் சொதப்பல்தான், பெரிசா சோபிக்க முடியாவிட்டாலும், நிறைய ஊர் பிரச்சாரங்களில் சர்ச்சையை வாரிக் கொண்டு வந்தார் பிரேமலதா. இப்போதும் அப்படி ஒரு உளறல் கருத்து வந்துள்ளது. இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    ஆந்திரா ஆளுநர்

    ஆந்திரா ஆளுநர்

    அப்போது தமிழிசைக்கு அளிக்கப்பட்ட பதவி குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா, "எங்க வீட்டு பக்கத்து தெருவுலதான் இருக்காங்க. என்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவங்க. இப்போ "ஆந்திராவின் ஆளுநராக" பதவி கிடைச்சதற்கு முதல் வாழ்த்தை தெரிவித்திருக்கோம். கேப்டனும் போன்ல விஷ் பண்ணாரு. நாளைக்கு நாங்க நேர்ல போய் பார்த்து வாழ்த்து சொல்ல போறோம்" என்றார்.

    டென்ஷன்?

    டென்ஷன்?

    அதாவது எந்த மாநிலத்துக்கு தமிழிசை ஆளுநராக போக போகிறார் என்பது கூட தெரியாமல் ஆந்திராவுக்கு என்று சொல்லி விட்டார். ஒருவேளை, டென்ஷனிலோ, அல்லது வேறு பரபரப்பு காரணமாகவோ பிரேமலதா இப்படி பேசியிருந்தால் பரவாயில்லை.. ஆனால் நிறுத்தி நிதானமாகத்தான் பேசுகிறார். பிறகு எப்படி மாநிலம் மாறியது என்று தெரியவில்லை. ஆனால் இந்த விஷயம், ஆந்திரா ஆளுநருக்கு தெரியாமல் இருந்தால் சரி!

    English summary
    DMDK Treasurer Premalatha greets Tamilisai Soundarajan being appointed as a "Andhra" Governer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X