சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை சின்னப்பிள்ளை, நம்பி நாராயணன், கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. ஜனாதிபதி வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: சமூக சேவகி, மதுரை சின்னப்பிள்ளை உட்பட பல்வேறு நபர்களுக்கு, இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.

நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு மொத்தம் 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாளில், இந்த விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.

President Ram Nath Kovind will confer the remaining Padma awards

இதில், இம்மாதம் 11ம் தேதி, முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஒரு பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

எல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்எல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்

பாக்கியிருந்த, பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வழங்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி, சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.

இதேபோல, விண்வெளி விஞ்ஞானி, நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விண்வெளி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக நம்பிராஜன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உடைத்தெறியப்பட்டு அவர் அப்பழுக்கற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது, மதுரை வந்திருந்தார். அப்போது, சின்னப் பிள்ளையின் காலில் விழுந்து, வாஜ்பாய், ஆசி பெற்றது அப்போது தேசிய அளவில் பரபரப்பு செய்தியாக இடம் பெற்றிருந்தது, அனைவரும் நினைவிருக்கலாம்.

English summary
President Ram Nath Kovind will confer the remaining Padma awards on prominent personalities at a civil investiture ceremony in Rashtrapati Bhawan today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X