சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 2-ல் சென்னை வரும் குடியரசுத் தலைவர்.. சிறப்பான வரவேற்பு.. தீவிர பாதுகாப்பு.. இறையன்பு ஆலோசனை!

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லி சென்று குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

ஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்!ஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வருகை தருமாறு குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

கருணாநிதி உருவப்படம் திறப்பு

கருணாநிதி உருவப்படம் திறப்பு

இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி சட்டசபையில் நடைபெறும் விழாவில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என்று சபாநாயாகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த விழாவுக்கு அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.

குடியரசுத் தலைவர் வருகிறார்

குடியரசுத் தலைவர் வருகிறார்

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை ஒட்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது குடியரசுத் தலைவருக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்? அவர் பங்கேற்றும் நிகழ்ச்சியில் என்னென்ன ஏற்பாடுகள், விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.

ஸ்டாலின் உத்தரவு

ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார் குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று கருணாநிதி உருவப்படத்தை திறக்க வருமாறு அழைப்பு விடுத்ததும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடன்டியாக சரி என்று தலையாட்டினார் குடியசுத் தலைவர். சென்னை வரும் ராம்நாத் கோவிந்த்துக்கு மிக சிறப்பான வரேவற்பும், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

English summary
President Ramnath Govind arriving in Chennai on August 2, Tamilnadu Chief Secretary iraianbu held intensive consultations with senior officials on security arrangements
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X