சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்தார்.. திரண்ட தலைவர்கள்.. உற்சாக வரவேற்பு

திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து, அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்துள்ளார். பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து, முர்மு ஆதரவு திரட்டுகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க போகிறது.. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார்... இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

நாங்க இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சர்னா! திரௌபதி முர்மு சார்ந்த.. 5 மாநில பழங்குடியினர் போராட்டம்!நாங்க இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சர்னா! திரௌபதி முர்மு சார்ந்த.. 5 மாநில பழங்குடியினர் போராட்டம்!

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நேற்று முன்தினம், யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்திருந்தார்.. அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அப்போது அவர் ஆதரவு கோரினார்... முன்னதாக சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.. காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சின்ஹா கோரினார்..

திரௌபதி

திரௌபதி

அதேபோல, பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் திரௌபதி முர்மு.. இவரும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி கொண்டு வருகிறார்... அந்த வகையில், இன்றைய தினம், திரௌபதி முர்மு, சென்னை வந்துள்ளார். பாஜக, அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களைச் சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பானது நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளான பாமக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

 திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

முன்னதாக, புதுச்சேரிக்கு செல்லும் திரௌபதி முர்மு அங்குள்ள கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுகதான் பிரதான ஆதரவு தரும் கட்சியாக பாஜகவுக்கு உள்ளது.. ஆனால் அதிமுகவில் இப்போதைய நிலைமை சரியில்லை.. ஓபிஎஸ், எடப்பாடி இவர்கள் இருவருமே தற்போது பிளவுபட்டு நிற்கிறார்கள்.. எனவே, திரௌபதி முர்முவை, இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திப்பார்களா? அல்லது தனித்தனியாக சந்திப்பார்களா? என்ற ஆர்வம் நேற்றில் இருந்தே எழுந்தது..

எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

ஆனால், இருவரையும் தனித்தனியே சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை, இவர்கள் ஒன்றாக சேர்ந்து, முர்முவை வரவேற்கும் பட்சத்தில், சில விஷயங்கள் நடக்கலாம் என்று யூகிக்கப்பட்டிருந்த நேரத்தில், பிளான்கள் நொறுங்கிவிடும் போல் தெரிகிறது... அதுமட்டுமல்லாமல், பொதுக்குழுவில் இருந்தே இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை என்பதால், இன்றைய தினம் இவர்கள் சந்திப்பார்களா என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் ஒட்டிக் கொண்டிருந்தது.. அதுவும் நொறுங்கி போய்விடும் நிலையில், இருவரின் விரிசலும் அதிகமாகி விட்டதே இதன்மூலம் தெரியவருகிறது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திரௌபதி முர்மு இன்று பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 2:00 மணிக்கு சென்னை வருகிறார்... அவருக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது... நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 4:00 மணிக்கு பாஜக - அதிமுக - பாமக - தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். மாலை 5:00 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.

பழங்குடி தலைவர்

பழங்குடி தலைவர்

மேலும், திரௌபதி முர்முவை வேட்பாளராக பாஜக அறிவித்ததில் இருந்தே, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.. ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரைவரான இவரை முன்னிறுத்தவும், பாஜகவுக்கு ஒரு கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.. குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக கூறப்படுகிறது..

காய்ச்சல்

காய்ச்சல்

அதுமட்டுமல்லாமல், எப்பொழுது திரெளபதி முர்மு பெயரை அறிவித்தோமோ, அன்னைக்கே, அப்போதே ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.. சமூக நீதியை உண்மையாக கடைபிடிப்பவராக ஸ்டாலின் இருந்தால், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை அவர் ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பொதுவெளியில், பகிரங்கமாக கேட்டுக் கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

Recommended Video

    Presidential Election-க்கு வேட்புமனுத் தாக்கல் செய்த Draupadi Murmu... அதிமுக பங்கேற்பு!
    எடப்பாடி

    எடப்பாடி

    இதனிடையே, திரௌபதி இன்று சென்னை வரும் சூழலில், அவர்களை அதிமுக தலைவர்கள் 2 பேரும் எப்படி வரவேற்பார்கள் என்ற கேள்வி எழுந்தபடியே உள்ளது.. இதுக்குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டபோது, அனைவருடனும் சேர்ந்து சந்திக்க தயாராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்து சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பதில் வந்ததாம்.. எடப்பாடியை சந்திக்க ஓபிஎஸ் தயாராகவே இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு தயக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

     புதுச்சேரி

    புதுச்சேரி

    டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை புதுச்சேரி வந்தார் திரௌபதி முர்மு.. தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அறிமுக கூட்டத்திலும் கலந்துகொண்டார். அவரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்.

     30 எம்எல்ஏக்கள்

    30 எம்எல்ஏக்கள்

    புதுச்சேரியை பொறுத்தவரை, 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தரப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்... இவர்களுடன் 4 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்... இதன்மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உட்பட 20 சட்டமன்ற உறுப்பினர்கள் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

     6 சுயேச்சைகள்

    6 சுயேச்சைகள்

    மொத்தமுள்ள 6 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில், மீதமிருக்கும் 2 எம்எல்ஏக்கள் மட்டும், தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை... அதேசமயம், நியமன உறுப்பினர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை கிடையாது என்பதால் புதுச்சேரியில் உள்ள 3 நியமன எம்எல்ஏக்கள் இதில் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    presidential candidate draupadi murmu to visit chennai today: presidential election திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து, அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X