சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: சீன பொருட்களுக்கு தடை மற்றும் ஸ்டீல், தாமிரம், அலுமினியம் உட்பட உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளதன் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி மற்றும் வாகனங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சீனாவில்இருந்து தான்இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விலையை விட சீனப்பொருட்களின் விலை குறைவு. இதற்கு காரணம் சீன பொருட்களை விட இந்திய பொருட்களின் தரம் அதிகம்.

எனினும் விலை குறைவு, மலிவாக கிடைக்கிறது என்பதற்காக பலரும் சீன தயாரிப்பையே வாங்கி வந்தார்கள். ஒருகட்டத்தில் சீனாவின் முன்னணி நிறுவனங்களும் குறைந்த விலையில் பொருட்களை இந்தியாவில் அதிக அளவில் விற்க ஆரம்பித்தன. இதற்கிடையே சீன பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இறக்குமதி

இறக்குமதி

இந்நிலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. . மத்திய அரசின் தடையால் இவற்றை இறக்குமதி செய்ய இயலவில்லை.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

இதைத் தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் விலையும் உயர உள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள் லேப்டாப், டிவி, வாஷிங் மெஷின் தேவைகள் அதிகமாக உள்ளது. இவற்றின் உலோக மூலப்பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களின் விலை அண்மை காலமாக உயர்ந்து விட்டது. பண்டிகை சீசனில் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு விலை உயர்வை உற்பத்தியாளர்கள் ஒத்திவைத்தனர். ஆனால், தொடர்ந்து இந்த பளுவை தாங்க முடியாத நிலையில் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளார்கள்.

எவ்வளவு உயர்வு

எவ்வளவு உயர்வு

எனவே. இன்னும் ஒரு மாதத்தில் விலை உயரக்கூடும். ஏசிக்களுக்கு 2 சதவீதம் வரை விலை உயர்வு உட்பட, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விலை 3 முதல் 5 சதவீதம் வரை உயரலாம் என்று சொல்கிறார்கள்.

உதிரி பாகங்கள் விலை

உதிரி பாகங்கள் விலை

கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட உலோகங்களின் விலை உயர்வும், நுகர்வோர் மேல் தான் விழப்போகிறது. ஸ்டீல், அலுமினியம், தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகிய முக்கிய உலோக பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 முதல் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறையில் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை அதிகரித்துள்ளது.. அசோக் லேலண்ட் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், டிவிஎஸ் மோட்டார்ஸ் சுமார் 1 சதவீதம் வரையிலும் விலையை உயர்த்தி உள்ளன.

English summary
Prices of TVs, bridges, washing machines, ACs and vehicles are also likely to rise due to the ban on Chinese goods and higher prices of metals including steel, copper and aluminum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X