சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்ச் 1ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

சென்னை: மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 14 தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோவை தொடங்கி வைத்தார். இதேபோல் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Prime Minister Modi to visit Tamil Nadu again on March 1

இதனிடையே ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே 4,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். மேலும் ர். மேலும், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை தொடங்கிவைத்த பிரதமர், நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலை அமைக்க அடிக்கல் நாட்டிவைத்தார்.

உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் வயசு தான் அவரது அனுபவம் .. முதல்வர் பொளேர்உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் வயசு தான் அவரது அனுபவம் .. முதல்வர் பொளேர்

இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் மார்ச் 1ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், சில திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கோவை வர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையொட்டி கோவையில் சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi is scheduled to visit Tamil Nadu again on March 1. pm modi Addressing a public meeting, to be laying the groundwork for various projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X