சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்து யார் யார்? நேரில் சந்தித்த பங்காரு அடிகளார்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் சிறிது நேரம் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகவும், பிரதமர் மோடிக்கு பங்காரு அடிகளார் ஆசி வழங்கினார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் சேவையை நாட்டுக்கு அர்பணித்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியல் பிரதமர் மோடி துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்றார். அதன்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இறுதியாக நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.

தமிழுக்கு முக்கியத்துவம்

தமிழுக்கு முக்கியத்துவம்

இந்த விழாவில் தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசியதுடன், தமிழக மீனவர்கள் நலன், தேவேந்திர குல வேளாளர் ஏற்பு உள்ளிட்டவற்றை பேசிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் போன்றோரின் பாடல்களையும் மேற்கோள்காட்டி பேசினார்.

ஆசிவழங்கினார்

ஆசிவழங்கினார்

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடிக்கு பங்காரு அடிகளார் பொன்னாடை போர்த்தியதுடன், ஆசியும் வழங்கினார். மரியாதை நிமித்தம் என்றாலும், பங்காரு அடிகளார் பிரதமர் மோடி சந்திப்பு அரரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது

பிரதாப் ரெட்டி சந்திப்பு

பிரதாப் ரெட்டி சந்திப்பு

இதுபோலவே முதல்வர் பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜகவின் கேடி ராகவன், அப்பல்லோ மருத்துவனைகள் சேர்மன் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர் அதன்பின்னர் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்.

தொகுதி இறுதி?

தொகுதி இறுதி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக பிரதமர் மோடி சந்தித்து பேசிய போது, இருவரும் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி நிலவரம் உள்ளிட்டவைகள் குறீத்து பேசியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 25ம் தேதி மீண்டும் கோவை வரும் சட்டசபை தேர்தலில் போட்டிய போகும் தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

English summary
Arriving in Chennai, Prime Minister Modi was met by the Bangaru Adigalar of the Adiparasakthi Peetha in Melmaruvathur. According to BJP sources, the meeting was held of respect and Prime Minister Modi was given the blessings of Bangaru Adigalar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X