சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி! ஏர்போர்ட்டில் வரவேற்கும் முதலமைச்சர்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது திமுக கடுமையாக எதிர்த்த நிலையில், இந்த முறை பிரதமரை தமிழக அரசின் விருந்தாளியாக பார்க்கிறது.

Recommended Video

    31,000 கோடி.. 11 திட்டங்கள்.. PM Modi தொடங்கி வைக்கும் திட்டங்கள் #Politics

    இதனிடையே வலதுசாரி சிந்தனைக்கு எதிரானவர்கள் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    ரூ31,400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா- பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை! ரூ31,400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா- பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை!

    மோடி வருகை

    மோடி வருகை

    தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். பிரதமரின் இந்த தமிழக வருகை அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் திமுக ஆட்சி அமைந்த பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக கடந்த ஜனவரி 12-ஆம் தேதி 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்தது.

    வரவேற்கும் ஸ்டாலின்

    வரவேற்கும் ஸ்டாலின்

    ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி காணொலி வாயிலாக புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்கவுள்ளார். ஸ்டாலினே மோடியை வரவேற்க செல்வதாலும், பிரதமருடன் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாலும் திமுக ஐடி விங் இந்த முறை மோடிக்கு எதிராக எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.

    சமூக வலைதளம்

    சமூக வலைதளம்

    ஆனால் அதே வேளையில் வலதுசாரி சிந்தனைக்கு எதிரானவர்கள் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே திமுக ஐடி விங்கை பொறுத்தவரை பிரதமரின் தமிழக வருகையை எதிர்க்கவும் இல்லை, வரவேற்கவும் இல்லை. நெளிவு சுளிவுடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது திமுக ஐடி விங்.

    25 விதமான வரவேற்பு

    25 விதமான வரவேற்பு

    பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், என 25 விதமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பிரதமர் பயணிக்கும் பாதையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களை சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது தமிழக பாஜக.

    English summary
    Prime Minister Narendra Modi Tamil Nadu visit:திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X