சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை.. ஆனா படிக்கவிடுவதில்லை.. ராமதாஸ் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அறிவித்துவிட்டு, தமிழை படிக்காமல் இருக்க வகை செய்வது எந்தவகையில் நியாயம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் போன்று, 11 மற்றும் 12ம் வகுப்பில் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநில பொதுக்கல்வி வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Priority in employment But Does not teach Tamil, Ramadoss question

ஆறு பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ள ராமதாஸ், ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளும் முறை மிகவும் ஆபத்தானது, அதுகுறித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை! பாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை!

பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய 4 முதன்மை பாடங்களை படிக்க வேண்டிய நிலையில், 5 வதாக மொழிப் பாடத்தில் ஆங்கிலத்தை தேர்வு செய்ய அதிகம் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தை மட்டும் படிக்கும் மாணவர்கள் இலக்கணம் தெரியாதவர்களாக மாறுவது, தமிழை அழிவுக்கு அழைத்து செல்லும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அறிவித்துவிட்டு, தமிழை படிக்காமல் இருக்க வகை செய்வது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ்,

ஒற்றை மொழி பாடமுறையை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

English summary
Ramadoss question that Priority in employment But Does not teach Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X