சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நோ.. நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: நளினியின் பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கணவன் மனைவியான முருகனும் நளினியும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Prison officials refused to extend Nalinis parole for a few more days

முருகன் வேலூர் மத்திய சிறையிலும் நளின் வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் முருகன் - நளினி தம்பதியின் மகள் ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார்.

மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த நளினி, 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனுவை இன்று பரிசீலித்த சிறைத்துறை அதிகாரிகள் நளினியின் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்.

English summary
Prison officials refused to extend Nalini's parole for a few more days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X