சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுதளம் அமைக்க அனுமதி.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளம் அமைக்க அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், சிவன் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

Private sector will be allowed to set up a launchpad at Sriharikota: K Sivan

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி துவங்கியுள்ளதால் தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும்.

தனியாருக்கு ஆலோசனைகள் வழங்குவோம். ஆனால், ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ கட்டணம் வசூலிக்காது. இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இரு ஏவுதளங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் தயாராக இருந்தால், அவர்கள் அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திகொள்ள விண்ணப்பிக்கலாம்.

மோடி அப்படி பேசியிருக்கக் கூடாது.. இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல் இல்லை.. சீன தூதர் சன் விடாங் மோடி அப்படி பேசியிருக்கக் கூடாது.. இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல் இல்லை.. சீன தூதர் சன் விடாங்

தற்போது கொரோனா தொற்றுக்கு இடையே, செயற்கைக்கோள் ஏவும் பணிகளை செய்வது சிரமம் என்பதால், நிலைமையை பார்த்துக் கொண்டு, அடுத்து வரும் மாதங்களில் செயற்கைக்கோள்கள் ஏவப்படும்.

இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ISRO chief Shivan has said that the private sector will be allowed to set up a launchpad at Sriharikota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X