• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ஹேட்ஸ் ஆப் பிரியங்கா".. லத்தியை பாய்ந்து தடுத்து.. களமிறங்கினால் பாஜக என்னாகும்.. திக் திக் சர்வே

|

சென்னை: "ஹேட்ஸ் ஆப் பிரியங்கா" என்று தொண்டர்கள் ஒருசேர குரல் எழுப்பி கொண்டிருக்கும் இந்த நிலையில், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால் பாஜகவுக்கு ஆபத்து என்பதையும் நம் வாசகர்கள் அழுத்தமான வாக்குகளை கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு முன்பிருந்தே, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கொண்டே இருந்தன.. ஆனாலும், நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்தபடியே இருந்தன.

இந்த சமயத்தில்தான் ஹத்ராஸ் சம்பவம் நடந்து மொத்த பேரையுமே உலுக்கி எடுத்துவிட்டது.. ராகுலும், பிரியங்காவும் களத்தில் குதித்தனர்.. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கிளம்பி வந்தது முதலே நாட்டை ஒருவித பரபரப்பு பீடித்து கொண்டது.

போலீசை எச்சரித்த அனல் பார்வை.. தாயை கட்டிப்பிடித்து கண்ணீரை துடைத்த பிரியங்கா - புகழும் நெட்டிசன்ஸ் போலீசை எச்சரித்த அனல் பார்வை.. தாயை கட்டிப்பிடித்து கண்ணீரை துடைத்த பிரியங்கா - புகழும் நெட்டிசன்ஸ்

ராகுல்

ராகுல்

லத்தி சார்ஜ், தடுத்து நிறுத்தம் போன்றவைகளால் ராகுல் நிலைகுலைந்து கீழேவிழுந்தார்.. இன்னொரு பக்கம் பிரியங்கா காந்தி அதிரடியில் குதித்தார்.. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல காரை எடுத்து கொண்டு கிளம்பியது முதல் அவர் சட்டையை போலீஸ்காரர் ஒருவர் பிடித்து இழுத்தது.. கூட்டத்தினரை பிளந்து கொண்டு பிரியங்கா செல்ல முயன்றது.. உயிரிழந்த பெண்ணின் அம்மாவை கட்டிப்பிடித்து அரவணைத்து ஆறுதல் சொன்னது வரை எல்லாமே அடுத்தது நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இதை பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆச்சரியத்தில் உறைந்து நின்றனர் என்றால், பாஜகவுக்கு அடிவயிற்றில் அள்ளு கிளம்பிவிட்டதே என்றே சொல்ல வேண்டும்.. உடனடியாக உபி காவல்துறை நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டாலும், பிரியங்காவின் இந்த அதிரடி, பாஜக மேலிடத்தை சற்று அதிர வைத்தது என்றே சொல்லலாம்.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இதைவைத்துதான், நம் வாசகர்களிடம் ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பினை நடத்தினோம்.. அதில், "பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால் பாஜகவுக்கு ஆபத்தா?" என்ற கேள்வியை நேரடியாகவே கேட்டோம்.. அதற்கு, "கண்டிப்பா பேராபத்து" என்ற ஆப்ஷனுக்கு 44.02 சதவீதம் பேரும், "அப்படியெல்லாம் இல்லை" என்ற ஆப்ஷனுக்கு 15.74 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். " காங்கிரஸ் பலனடையும்" என்ற ஆப்ஷனுக்கு 27.33 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 12.91 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

பாஜக

பாஜக

இந்த கணிப்பின் மூலம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்.. "கண்டிப்பா பேராபத்து" என்ற ஆப்ஷனுக்கு 44.02 சதவீதம் பேரும், "காங்கிரஸ் பலனடையும்" என்ற ஆப்ஷனுக்கு 27.33 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.. கிட்டத்தட்ட இந்த 2 ஆப்ஷனையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்ளலாம்.. அப்படியானால் பாஜகவுக்கு நெருக்கடிதான் என்பதையும் பிரியங்காவின் வருகை உறுதிபடுத்தி வருகிறது.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இதற்கு காரணம், நடந்த சம்பவம் அவ்வளவு கொடூரமானது.. அதேசமயம், அதிகபட்ச பாலியல் பலாத்காரம் நடப்பது ராஜஸ்தானில்தான்.. இதை ஏன் காங்கிரஸ் கேள்வி கேட்கல? கேரளாவில் இதுபோலவே பாலியல் வன்கொடுமை மரணம் நடந்தபோது, அங்கே ஏன் காங்கிரஸ் செல்லவில்லை? பாஜக ஆட்சி செய்யற மாநிலங்களில் மட்டும் நடக்குற தப்பை கேள்வி கேட்பேன் என்றால் என்ன அர்த்தம்? இதெல்லாம் ஓட்டுக்காகத்தான்... அதிலும் தலித் ஓட்டு என்பதால்தான் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று இதை விமர்சித்து வருபவர்களும் உண்டு.

தலித் பெண்

தலித் பெண்

என்னதான் காங்கிரஸை குறை சொன்னாலும், தலித் பெண்ணின் மரணம் பாஜகவுக்கு தலைகுனிவுதான்.. அதைவிட மிகப்பெரிய விஷயம், இந்த கொலையை மறைக்க, அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்று காங்கிரசுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவோரும் உண்டு. எனினும் எப்படி பார்த்தாலும், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால் பாஜகவுக்கு ஆபத்து என்பதற்கான அறிகுறி ஹத்ராஸில் தென்பட ஆரம்பித்துவிட்டது.

English summary
Priyanga Gandhi gets more support from people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X