சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஆப்' டவுன்லோட் பண்ணுங்க… குடிநீர் பிரச்சனையை உடனே சொல்லுங்க

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக புதிய 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் சரசரவென குறைந்து வருகிறது.

கோடையில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதை தவிர்க்கவும், குடிநீர் வீணாக்கப்படுவதை தடுக்கவும் தற்போது புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்! ஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்!

செல்போன் மூலம் புகார்

செல்போன் மூலம் புகார்

இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடதிலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் பிளே

கூகுள் பிளே

பொதுமக்கள் தங்கள் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அமைச்சர்தொடங்கி வைத்தார்

அமைச்சர்தொடங்கி வைத்தார்

பொது மக்கள் தங்களது புகார் மீதான நடவடிக்கை விவரங்கள் மற்றும் அப்போதைய நிலை பற்றிய விவரங்களை செயலி மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

சிறிய டேங்குகள்

சிறிய டேங்குகள்

இந்த நிலையில் வறட்சியை சமாளிப்பதற்காகவும், குறுகலான சாலைகளில் எளிதாக செல்லக்கூடிய 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு சின்டெக்ஸ் டேங்க்குகளை ஏற்றிச் செல்லக் கூடிய சிறிய லாரிகளை இயக்குவதற்கு சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து 90 குடிநீர் லாரிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

English summary
The new 'APP' has been introduced to solve the drinking water problem in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X