சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நளினியை புழல் சிறைக்கு மாற்றுவதில் நிறைய பிரச்சினை உள்ளது - சிறைத்துறை டிஜிபி ஹைகோர்ட்டில் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் சிறையில் இருக்கும் போது பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு முன் விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், நளினியின் கோரிக்கையை ஏற்று அவரையும், அவரின் கணவரையும் புழல் சிறைக்கு மாற்றினால், இரு கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவு துறை தெரிவித்துள்ளதால், சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று சிறைத்துறை தலைவர் சுனில் குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி, அவரது தாய் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Problem will arise if Nalini is transferred to Puzhal Jail - Prison DGP informed in High Court

அந்த மனுவில், மறைந்த பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி வேலூா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினியை சிறைத்துறை அனுமதி பெற்று, சென்னையிலிருந்து வேலூா் சென்று நான் சந்தித்து வருகிறேன். 80 வயதான நிலையில் எனது மகளை வேலூா் சென்று பார்த்து வருவது சிரமமாக உள்ளது. எனவே வேலூரில் உள்ள பெண்கள் சிறையிலிருந்து நளினியை சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறையிடம் கடந்த மாதம் மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே அந்த மனுவைப் பரிசீலித்து நளினியை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.

எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 17 மாணவர்கள் மீது வழக்கு - ஹைகோர்ட் ரத்து எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 17 மாணவர்கள் மீது வழக்கு - ஹைகோர்ட் ரத்து

இந்த மனுவிற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில் சிறைத்துறை தலைவர் சுனில் குமார் சிங் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கொரனா தொற்று பரவலை தடுக்க, சிறைகளில் உறவினர்கள் சந்திப்புகளுக்கு அனுமதியளிக்கவில்லை என்றும், கைதிகள் இந்தியாவிற்குள் இருக்கும் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேச அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு தன்னையும், தன் கணவரையும் மாற்ற கோரி நளினி அளித்த மனு, கொரானா தொற்று காரணமாக ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நளினி அற்ப காரணங்களுக்காக சக கைதிகளுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், சிறைத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் இருக்கும் போது பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு முன் விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், நளினியின் கோரிக்கையை ஏற்று அவரையும், அவரின் கணவரையும் புழல் சிறைக்கு மாற்றினால், இரு கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவு துறை தெரிவித்துள்ளதால், சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

English summary
Prison DGP Sunil Kumar has filed a reply saying that the petition filed by Nalini seeking transfer of herself and her husband from Vellore jail to Puzhal jail has already been rejected due to corona infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X