சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“பொய் பரப்புகிறார்கள்” - சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சிம்பு, இயக்குனர் டி ராஜேந்திரருக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் சென்னை கமிஷனர் அளித்துள்ளார்.

Recommended Video

    Simbu குடும்பமே சேர்ந்து என்ன ஏமாத்திட்டாங்க AAA Producer Michael Rayappan அதிரடி

    தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகி இருந்தாலும் கூட படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தின் இரண்டாம் பாகமும் அதன்பின் வெளியாகவில்லை. சிம்பு மூன்று கெட்டப்களில் வந்த நிலையிலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தீபாவளிக்கு வர வேண்டிய சிம்புவின் மாநாடு படமும் தள்ளிப்போய் உள்ளது. இதற்கு பின் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக இருப்பதாக சிம்பு, டி.ராஜேந்தர் தரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

    சிம்பு கெடச்சா எப்படி விட முடியும்.. தர்ஷா மனசு எப்படி பொங்குது பாருங்க! சிம்பு கெடச்சா எப்படி விட முடியும்.. தர்ஷா மனசு எப்படி பொங்குது பாருங்க!

    புகார்

    புகார்

    இந்த நிலையில்தான் நடிகர் சிம்புவிற்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார். சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரில், நான் குளோபல் இன்பர்மேட்டிவ் சினிமா நிறுவனத்தை கடந்த 12 வருடமாக நடத்தி வருகிறேன், பல வெற்றிப்படங்களை மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கிறேன்.மேலும் 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற திரைப்படத்தை மேற்கண்ட எனது நிறுவனத்தில் தயாரித்து வெளியிட்டேன். மேற்கண்ட இப்படத்தை . ஆதிக் இரவிச்சந்திரன் என்ற இயக்குநர் இயக்கினார்.

    சிம்பு

    சிம்பு

    இந்த மேற்கண்ட திரைப்படத்தில் தொடக்கத்திலிருந்தே சிம்பு அவர்கள் சரிவர நடிக்கவில்லை , சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்பிற்கு வருவதுமில்லை . இந்நிலையில் படம் 50% எடுத்து முடித்த நிலையில் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து, இந்தப்படத்தை இத்துடன் முடித்து ரிலீஸ் செய்துவிடலாம் எனவும், இதில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்காக நானே ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் என்னையும் இயக்குநர் மற்றும் படத்தின் மேலாளர் இராஜேந்திரன் அழைத்துக் கூறிய நிலையில் நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. என்னை வற்புறுத்தி, படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் வந்தால் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என உறுதியளித்தார்

    பொய்யான புகார்

    பொய்யான புகார்

    அதனடிப்படையில் நானும் மேற்கண்ட திரைப்படத்தை 23.06.2017 அன்று வெளியிட்டேன், படமும் சரியாக ஓடவில்லை . பெருத்த நஷ்டமடைந்தேன், இதன் மூலம் ஏறத்தாழ 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது, இதில் ரூ.12 கோடி விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டியிருந்தது. அதன் பிறகு என்னால் அடுத்த திரைப்படமும் தயாரிக்க முடியவில்லை. இந்நிலையில் திரு.சிம்பு அவர்களே என்னை போனில் தொடர்பு கொண்டு விரைவில் அடுத்த படத்தை நீங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அவர் தந்த வாக்கின்படி தேதி கூறும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அதன்பிறகு என் தொடர்பில் திரு.சிம்பு அவர்கள் வரவேயில்லை , இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டு வருகிறார்.

    நஷ்டம்

    நஷ்டம்

    இந்நிலையில் 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்' புகார் ஒன்றை அளித்தேன். அப்போதைய தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகள் பல முறை விசாரித்து விரைவில் ஒரு திரைப்படம் நடித்து தரவேண்டும் என சங்கம் கூறிய நிலையில் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் நிர்வாகம் மாறிய பிறகு அதெல்லாம் முடியாது என்று தற்பொழுதுவரை இழுத்தடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு T.ராஜேந்தரர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் அளித்த பேட்டி ஒன்றில் அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது என்றும் அப்புகாரில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.

    விஷால்

    விஷால்

    மேலும் மாநாடு திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தடை போட்டிருப்பதாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், மாமூல் கேட்பதாகவும் கந்துவட்டி கேட்பதாகவும் பல முறையற்ற குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தனர். இவை யாவும் பொய்யான குற்றசாட்டுகளே 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தங்களால் தீபாவளிக்கு 'மாநாடு' படம் வர இயலாது என்றும் அப்படி வெளியிடும் பட்சத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே "மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியிட உள்ளதாக அறிக்கை மூலம் இவர்கள் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பே அறிவித்து இருந்தார். அந்த அறிக்கைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

    மாமூல்

    மாமூல்

    இம்மாதிரியான தவறான தகவல்களை தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தந்து வருகின்றனர். மேற்கூறிய குற்றசாட்டுகள் யாவுமே உண்மைக்கு புறம்பானவை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னால் தலைவர் விஷால் எடுத்த முடிவை மட்டுமே நிறைவேற்ற வலியுறுத்தினார்களே தவிர வேறு எந்த கட்டபஞ்சாயத்தும் இரு சங்கங்களிலும் நடைபெறவில்லை. மேலும் இப்பொழுது இவர்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. எனவே மேற்கண்ட விஷயத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவினை வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் மற்றும் தொடக்கத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்கு பெறும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்.

    English summary
    Producer Micheal Rayappan complaints against Actor Simbu in the Chennai commissioner office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X