சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா தேவி கூறிய வாக்குமூலம் பொய்யானது - பேராசிரியர் முருகன் மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்காகவே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் முற்றிலும் தவறானது என்று பேராசிரியர் முருகன் மறுத்துள்ளார்.

    அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை கல்லூரியில் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார். அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன் நிர்மலா தேவி பேசிய ஆடியோவையும் வெளியிட்டனர்.

    Professor Murugan refuses Nirmala Devis statement

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

    அதில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், என் வீட்டுக்கு வந்த போது என்னுடன் இரு முறை உறவு கொண்டார். எனது மகள் ஆல்பத்தை பார்த்துவிட்டு அவர் வருவாரா என கேட்டார். அதற்கு நான் அவர் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றேன்.

    ஜெ. மரண விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி! ஜெ. மரண விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி!

    உடனே கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார். நானும் பார்ப்பதாக கூறினேன். இதனிடையே இவருடைய அறிமுகத்தின் பேரில் கருப்பசாமியுடனும் உல்லாசம் அனுபவித்தேன்.

    இருவரும் சேர்ந்துதான் கல்லூரி மாணவிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டனர் என நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் இதை பேராசிரியர் முருகன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் நிர்மலா தேவி அளித்ததாக நாளிதழில் வெளியான வாக்குமூலங்கள் அனைத்தும் பொய்யானவை. நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்பேன் என்றார் பேராசிரியர் முருகன்.

    English summary
    Professor Murugan refuses Nirmala Devi's statement. He will tell all the truth in Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X