சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையில் என்னை யாருமே பார்க்க வரவில்லை... வேதனையோடு சொன்ன நிர்மலாதேவி!

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை : சிறையில் இருக்கும் தன்னை ஒருவர் கூட பார்க்க வரவில்லையே என்று மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார். சிறை செல்வதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முருகன், கருப்பசாமிக்காக மாணவிகளிடம் தூது போக இப்போது அவர்கள் கூட திரும்பிப் பார்க்கவில்லை என்ற வேதனையை நிர்மலாதேவி இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

    கல்லூரிகளில் இதுவரை திரைமறைவில் நடந்து வந்த மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் பேராசிரியர் நிர்மலாதேவியால் பகிரங்கமாக வெளிப்பட்டது. கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை மூளைச் சலவை செய்து தனக்கு நெருக்கமான பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு விருந்தாக்க நினைத்து தொலைபேசியில் போட்ட வலை அவரையே கிழித்து நார் நாராக தொங்க விட்டுள்ளது. பாடம் கற்றுக்கொடுக்க வேண்டிய மாணவிகளுக்கு நிர்மலாதேவி எடுத்த தவறான பாடம் எடுபடவில்லை.

    பணியாசை, பணத்தாசை காட்டிய போது மசியாத மாணவிகள் இது தொடர்பாக இனி எங்களிடம் பேச வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டனர். இரு முனை பேச்சுவார்த்தை தான் இது யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்த நிர்மலாதேவியின் கனவு பொய்யானது. ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடிக்க அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதோடு கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

    என்ன செய்கின்றன அரசியல் கட்சிகள்.. சாதி வெறிக்கு பலியான ராஜலட்சுமியை கண்டுகொள்ளாதது ஏன்? என்ன செய்கின்றன அரசியல் கட்சிகள்.. சாதி வெறிக்கு பலியான ராஜலட்சுமியை கண்டுகொள்ளாதது ஏன்?

    அடேங்கப்பா லிஸ்ட்

    அடேங்கப்பா லிஸ்ட்

    சிபிசிஐடி விசாரணையில் நிர்மலாதேவி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் படிக்கவும், கேட்கவும் கூசுகின்றன. வரைமுறை இல்லாமல் கணவரின் நண்பர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி என்று தனக்கு தெரிந்தவர்களுடன் தனிமையில் நெருக்கமாக இருந்திருக்கிறார் நிர்மலாதேவி. வடிவேலு காமெடியில் வருவது போல லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

    உதவி கேட்டு அலைந்தேன்

    உதவி கேட்டு அலைந்தேன்

    இந்நிலையில் தான் கைது செய்யப்படும் செய்தியை அறிந்து உதவி கேட்ட போது அனைவருமே தன்னை கைவிட்டுவிட்டதாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி ஆடியோ வெளியானதையடுத்து கருப்பசாமியை போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் ஆனால் அவர் என்னுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டார். பின்னர் எஸ்எம்எஸ் அனுப்பினேன் அதற்கும் பதில் இல்லை.

    முருகன், மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்

    முருகன், மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்

    பின்னர் முருகனிடம் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். ஏப்ரல் 15,16ல் நான் அவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரும் பதில் அனுப்பவே இல்லை. 14 மற்றும் 15ம் தேதிகளில் மாணவிகளுக்கும் தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பினேன் அப்போதும் பதில் இல்லை. போலீசார் என்னை கைது செய்ய வந்த போதும் உதவி கேட்டு என்னுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன், ஆனால் யாருமே பதில் அளிக்கவில்லை.

    பார்க்க யாருமே வரலயே

    பார்க்க யாருமே வரலயே

    மாணவிகளிடம் தொலைபேசியில் பேசியதால் தான் நான் வசமாக சிக்கிக்கொண்டேன். நான் யாருக்காக பேசினேனோ அவர்கள் யாருமே எனக்கு உதவவில்லை, சொல்லப்போனால் சிறையில் இருக்கும் என்னை யாருமே வந்து பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று நிர்மலாதேவி வேதனையோடு கூறியுள்ளார்.

    English summary
    Professor Nirmaladevi says that whoever close to me before came to jail no one helped me at the time of arrest and after i am jailed too no one came to meet me.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X