சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமாவளவன் குறித்த அவதூறு கருத்தை வெளியிட தடை.. "அவதூறு கும்பலுக்கு எச்சரிக்கை": வன்னி அரசு சுளீர்

திருமாவளவன் பற்றி அவதூறு கருத்து வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிடத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட கண்ணகி-முருகேசன் ஆகியோரை கடந்த 2003-ம் ஆண்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதாவது குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும், இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடிமைப்படுத்தும் எண்ணம் இல்லை... நாற்காலியின் மீது நடந்தது பற்றி திருமாவளவன் விளக்கம் அடிமைப்படுத்தும் எண்ணம் இல்லை... நாற்காலியின் மீது நடந்தது பற்றி திருமாவளவன் விளக்கம்

சட்டம்

சட்டம்

இந்த தீர்ப்பு வந்த அடுத்த சில தினங்களில் திருமாவளவன் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதன்படி, "ஆணவ படுகொலையை தடுப்பதற்கு என ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும்.அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது... தமிழக உயர் நீதிமன்றமும் அப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 திருமாவளவன்

திருமாவளவன்

இந்நிலையில், திருமாவளவன் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்... அதில், "2003ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் ஆகியோர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் எனக் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 சாமிக்கண்ணு

சாமிக்கண்ணு

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், தன்னைப் பற்றியும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி. ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

விசாரணை

விசாரணை

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை முழுமையாக விசாரிக்காமல், கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது... எனவே என்னைப் பற்றிய அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் மான இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும், தனக்கு எதிரான உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பதிவுசெய்ய எட்டு எதிர்மனுதாரர்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.. அவற்றை வெளியிட ஃபேஸ்புக், யூ-ட்யூப் தளங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

 வன்னி அரசு

வன்னி அரசு

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துகளை எதிர்மனுதாரர்கள் வெளியிட தடைவிதித்ததுடன், வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்... இந்த உத்தரவை, விசிகவின் வன்னி அரசு

English summary
Kannaki Murugesan murder issue Prohibition on publishing defamatory remarks about VCK Thirumavalavan, High court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X