எல்லா பக்கமும் அடி.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! அப்போ ஆஸ்திரேலியா.. இப்போ இங்கிலாந்து!
சென்னை: அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்திலும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது. லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி, "சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்" என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் கவலை நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டவிரோத குடியேறிகள்தான் கவலைகொள்ள வேண்டுமெனவும், முறையாகக் குடியேறிய இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவில் மக்கள் இங்கிலாந்துக்குச் சென்று சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைச் சேவைகளைப் பயன்படுத்துவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
இதனால் வேலைவாய்ப்புக் குறைவு, வீட்டு வாடகை உயர்வு, பொருளாதாரச் சுமை ஆகியவை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகவே பொதுமக்கள் சாலைகளில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் லண்டனில் நடந்த பிரம்மாண்டப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

லண்டன் போராட்டம்
உள்ளூர் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றாலும் இது ஒரு இனவெறிப் போராட்டம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியர்களைக் குறிவைத்தும், ஆப்பிரிக்கர்களைக் குறிவைத்தும் வெள்ளையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இங்கிலாந்தில் தற்போது சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கல்வி, வேலை, வணிகம் ஆகிய காரணங்களுக்காக அங்கு சட்டபூர்வமாக வாழ்கின்றனர்.
சட்டவிரோத குடியேற்றம்
ஆனாலும் சிலர் சுற்றுலா விசா அல்லது ஸ்டூடென்ட் விசாவைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சூழலில், சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம் அனைத்துக் குடியேற்றக்காரர்களையும் ஒரே அளவிலான சந்தேகத்தோடு பார்க்கும் நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது.
விசா ஆவணங்கள்
இதனால் இந்தியர்கள் வேலைவாய்ப்பில் சிரமம், வீட்டு வாடகையில் பாகுபாடு, அன்றாட வாழ்வில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், சட்டபூர்வ ஆவணங்களை எப்போதும் வைத்திருப்பது அவசியம். பாஸ்போர்ட், விசா, ரெசிடென்ஸ் பெர்மிட் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
யாராவது சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தூண்டினாலும் அதனை நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. தாங்கள் தங்கியிருக்கும் நாட்டின் விதிமுறைகள் மற்றும் குடியேற்ற சட்டங்களை மதித்து நடப்பது முக்கியம். குறிப்பாக, மாணவர்கள் தங்களின் கல்லூரி மற்றும் வேலை சார்ந்த ஆவணங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும். ஏதாவது பிரச்சனையை சந்திக்க வேண்டி இருந்தால், இந்திய தூதரகம் மற்றும் கம்யூனிட்டி சங்கங்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்கின்றனர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.
குடியேற்ற சட்டம்
இங்கிலாந்தில் வெடித்துள்ள இந்தப் போராட்டம், சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை எனினும், சட்டபூர்வமாக வாழும் இந்தியர்களுக்கு அச்சம் தேவையில்லை. தேவையான ஆவணங்களை சரியாக வைத்திருப்பதும், சட்டத்தை மதிப்பதும், தூதரக ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான சிறந்த வழியாகும். அதே நேரத்தில் உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்கும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அவர்களது ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியர்களுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications