சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க குட்டீஸ் கைல இருக்கற செல்போனை பிடுங்காதீங்க மக்களே.. அதுக்குப் பதிலா இதை பண்ணுங்க போதும்!

உங்க குட்டீஸ் கைல இருக்கற செல்போனை பிடுங்காதீங்க.. அதுக்குப் பதிலா இதை பண்ணுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம்.

பள்ளி நாட்களிலேயே நம் வீட்டு குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன், டிவியில் தான் மூழ்கிக் கிடப்பார்கள். இப்போது பள்ளியும் இல்லை, வெளியே போய் விளையாட வழியும் இல்லை. பிறகு சொல்லவா வேண்டும். செல்போனும் கையுமாக தான் இருக்கிறார்கள் குழந்தைகள்.

Pschool is a usefull online portal for children

பெரியவர்களே முக்கிய போன் பேச வேண்டும் என்றால்கூட அவர்களிடம் கெஞ்சி கேட்கும் சூழல் தான் தற்போது உள்ளது.

குழந்தைகள் கையில் இருக்கும் போன்களை பிடுங்கிவிட்டு, அவர்களது நேரத்தை எப்படி பயனுள்ளதாக்குவது என யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு பிஸ்கூல் (pschool.in) இணையதளம் ஒரு புதிய பாதையை உருவாக்கி தந்துள்ளது.

இந்த இணையதளத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் பல அடிப்படை கல்வி பாடங்கள், செயல்முறை கற்றலாக தரப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், மூளைக்கு வேலை தரும் புதிர்கள் உள்ளிட்ட நிறைய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகள் இதனை பயன்படுத்தி, விளையாட்டாகவே நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். இந்த இணையதளத்தை செல்போன், கணினி மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் மூலம் பயன்படுத்தலாம். இதற்கு என தனியாக செயலி எதுவும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

எனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டு குட்டீஸ்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் வீட்டில் இருந்தபடி ஆபிஸ் வேலையையும், வீட்டு வேலையையும் ஒழுங்காக செய்ய முடியும்.

English summary
Pschool.in online website engages your children to use the corona lockdown time usefully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X