சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன்.. எடை கூடுதா? என்ன சாப்பிடலாம்.. எவ்ளோ நேரம் தூங்கலாம்.. சுபா சார்ல்ஸின் சூப்பர் டிப்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுன் நேரத்தில் என்ன சாப்பிடலாம்? எவ்ளோ நேரம் தூங்கலாம்? என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் சூப்பர் டிப்ஸ்களை கூறியிருக்கிறார்.

Recommended Video

    உடல் எடை அதிகரிக்காமல் இருக்க | தூக்கத்தில் பிரச்சனையா | | Part 5

    சீனாவில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுக்க இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    அமெரிக்கா, இத்தாலி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊரடங்கு நீட்டிப்பு

    ஊரடங்கு நீட்டிப்பு

    இந்தியாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்து.

    வெளியூரில் சிக்கியவர்கள்

    வெளியூரில் சிக்கியவர்கள்

    இந்நிலையில் லாக்டவுன் காலத்தை மக்கள் எப்படி மேற்கொள்வது என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் ஒன் இந்தியா நேயர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில்
    லாக்டவுன் காலத்தில் வெளியூரில் சிக்கி கொண்டவர்கள் மனதை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

    மனதில் இடம் கொடுங்கள்

    மனதில் இடம் கொடுங்கள்

    லாக்டவுன் காலத்தில் வெளியூரில் சிக்கி கொண்டவர்கள், விருந்தாளிகளாக உறவினர் வீட்டில் சிக்கியவர்கள் மன வேதனையில்தான் இருப்பார்கள். உங்கள் வீட்டில் யாராவது அப்படி வந்து மாட்டிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மனதில் முதலில் இடம் கொடுங்கள். தானாக வீட்டில் இடம் இருக்கும்.

    சிக்கிக்கொண்டார்கள்

    சிக்கிக்கொண்டார்கள்

    அவர்களும் மன வேதனையுடன்தான் வந்து தங்கியிருப்பார்கள். மனம் விட்டு பேச முடியாமல் வீட்டில் இடம் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால் சிரித்த முகத்தோடு அவர்களிடம் பழகுகுங்கள். அவர்கள் வேண்டுமென்றே உங்கள் வீட்டில் வந்து தங்கவில்லை. அரசாங்கத்தின் சட்டத் திட்டத்தால் சிக்கிக்கொண்டார்கள்.

    பாதுகாப்பாக..

    பாதுகாப்பாக..

    நீங்கள் முறைத்தால் அவர்கள் சோர்ந்து போவார்கள். உறவு முறையில் பாதிப்பு ஏற்படும். மனதை மட்டும் சுறுக்கி விடாதீர்கள். மனதிற்கு எல்லையே கிடையாது.. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மற்றவர்களை முறைத்து கொண்டிருந்தால் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். ஒருத்தரை ஒருத்த காயப்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம் இது.

    புற்று நோயை உருவாக்கும்

    புற்று நோயை உருவாக்கும்

    லாக் டவுன் காலத்தில் உணவு முறை மற்றும் தூக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் கூறியிருக்கிறார் சுபா சார்ல்ஸ். உணவு முறையை பொறுத்தவரை இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். உலக சுகாதார மையம் இனிப்பு, ஆல்கஹால் மற்றும் ரெட் மீட் ஆகியவை புற்றுநோயை உருவாக்கும் என்றும் கூறியுள்ளனர்.

    உயிரோட்டமான உணவுகள்

    உயிரோட்டமான உணவுகள்

    அதிக சாப்பாடு எடுக்கக்கூடாது. அரை வயிறு சாப்பிட்டால் போதும். இறந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.. உயிரோட்டமான உணவுகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம். புளித்த உணவுகளான இட்லி தோசை, பழைய சாதம் தயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இவை எல்லாம் உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும். இதனால் எதிர்ப்பு சக்தி கூடும்.

    தூங்க வேண்டிய நேரம்

    தூங்க வேண்டிய நேரம்

    அடுத்து தூக்கம் என்று பார்த்தால்.. இது தூங்க வேண்டிய நேரம்.. எவ்ளோ வேண்டுமானாலும் தூங்கலாம். மனது எப்போதெல்லாம் தூக்கத்தை கேட்கிறதோ அப்போதெல்லாம் தூங்குங்கள். வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறீர்களா.. அதற்கு ஒரு ரொட்டீன் செலக்ட் செய்யுங்கள். துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மீடியா மக்கள் எல்லாம் தூங்குவதே இல்லை.

    பேலன்ஸ் செய்யுங்கள்

    பேலன்ஸ் செய்யுங்கள்

    இவ்ளோ நேரம்தான் தூங்க வேண்டும் என்று சட்டத்திட்டங்களை போடாதீர்கள். டேக் இட் ஈஸி.. எல்லாவற்றையும் எளிமையாக்கி கொள்ளுங்கள். இப்போது படிப்பதில்லை வேலைக்கு போவதில்லை.. பிடித்தது போல் வாழுங்கள். இப்போது உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்.. உயிரோடு இருக்க எப்போது தூங்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் தூங்குங்கள். பிடித்தது பிடிக்காதது எது என கண்டுபிடியுங்கள்.. பேலன்ஸ் செய்யுங்கள்.. என கூறியிருக்கிறார் மனநல மருத்துவரான சுபா சார்ல்ஸ்.

    English summary
    Psychiatrist Subha Charles giving tips how to maintain weight in Lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X