• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கடனில் தவிக்கும் தமிழகம்.. "பொருளாதார புலி" பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர் பதவி.. ஸ்டாலின் செம

|

சென்னை: முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை அமைச்சர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த துறை சார்ந்த படிப்பு மட்டுமில்லாமல் நிதி விவகாரங்களில் மிகுந்த அனுபவம் கொண்ட பழனிவேல் தியாகராஜனுக்கு சரியான துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக பல தரப்பிலிருந்தும் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

திமுக மூத்த தலைவரான மறைந்த பிடிஆர் பழனிவேல் ராஜன் மகன்தான் பழனிவேல் தியாகராஜன்.

ஸ்டாலின் அமைச்சரவை.. கவுண்டர், முக்குலத்தோருக்கு தலா 4, வன்னியருக்கு 3.. பல சமூகத்திற்கு சம வாய்ப்புஸ்டாலின் அமைச்சரவை.. கவுண்டர், முக்குலத்தோருக்கு தலா 4, வன்னியருக்கு 3.. பல சமூகத்திற்கு சம வாய்ப்பு

கல்வியாளர்

கல்வியாளர்

தியாகராஜன் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியில் உள்ள, மண்டலப் பொறியியல் கல்லூரி என அழைக்கப்பட்ட தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் முடித்தார். பின்னர் தன் முதுநிலைப் பட்டப்படிப்பை செய்பணி ஆய்வில் முடித்தார். அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள State University Of New York, Buffaloவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நிதி விவகாரங்கள்

நிதி விவகாரங்கள்

MIT Sloan School Of Management நிறுவனத்தில் MBA படிப்பையும் முடித்துள்ளார் பழனிவேல் தியாகராஜன். படிப்பு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த விஷயங்களில் அனுபவம் கொண்டவர்தான் பழனிவேல் தியாகராஜன்.

நிதி சார்ந்த பணிகள்

நிதி சார்ந்த பணிகள்

ஏனெனில் 1990ல் ஆபரேஷன்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் மேம்பாட்டில் ஒரு ஆலோசகராக தன் தொழில் வாழ்க்கையைத் துவக்கினார் பழனிவேல் தியாகராஜன். இவர் 2001ல் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக பணியில் இருந்தார். பின்னர் அவர் லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை விட்டு விலகி, 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார்.

தகவல் தொழில்நுட்ப அணி

தகவல் தொழில்நுட்ப அணி

பழனிவேல் தியாகராஜன் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில், குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்த பழனிவேல் தியாகராஜன் 2014ம் ஆண்டு அதைவிட்டு விலகினார். அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திமுகவின் தேர்தல் வெற்றியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி பங்களிப்பும் கணிசமாக இருந்ததை மறுக்க முடியாது.

மதுரை மத்திய தொகுதி

மதுரை மத்திய தொகுதி

நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மெத்த படித்த கல்வியாளர் மட்டுமின்றி நிதித்துறை சார்ந்த விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்ட பழனிவேல் தியாகராஜன் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகுதியுள்ளோருக்கு பதவி

தகுதியுள்ளோருக்கு பதவி

ஒரு சீனியர் தலைவருக்கு நிதித் துறை அமைச்சக பொறுப்பை கொடுத்தோம் என்று இல்லாமல், உரிய கல்வித்தகுதி மற்றும் அனுபவ தகுதி உள்ளவருக்கு ஸ்டாலின் இந்த பதவியை வழங்கியுள்ளார். தற்போது, தமிழ்நாட்டின் கடன் தொகை 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தவிர கொரோனா காரணமாக நிதி ஆதாரத்தை அதிகரிக்க முடியவில்லை.

கஜானாவை மீட்க வேண்டும்

கஜானாவை மீட்க வேண்டும்

தமிழக நிதி நிலைமை மிக மோசமான சூழ்நிலையில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், பழனிவேல் தியாகராஜன் தனது அனுபவத்தையும் பயன்படுத்தி இந்த இக்கட்டிலிருந்து தமிழக கஜானாவை மீட்டெடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையை அவர் மீது ஸ்டாலின் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

English summary
PTR Palanivel Thiagarajan is well known economist, that is the reason why MK Stalin appointed him as finance minister of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X