சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காயத்திரி ரகுராம் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட திமுக ஐடி விங் நிர்வாகி.. சஸ்பெண்ட் செய்த பிடிஆர்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவைச் சேர்ந்த காயத்திரி ரகுராம் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பிய திமுகவைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன் அப்பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஜெயச்சந்திரனை ஏன் தற்காலிகமாக மட்டும் நீக்கம் செய்துள்ளீர்கள், குண்டர் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

 தந்தை ஸ்தானத்தில் பால்வாக்கர் மகள் திருமணத்தை நடத்திய வின் டீசல்...உருகும் ரசிகர்கள் தந்தை ஸ்தானத்தில் பால்வாக்கர் மகள் திருமணத்தை நடத்திய வின் டீசல்...உருகும் ரசிகர்கள்

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக இருப்பவர் காயத்திரி ரகுராம்.
பொது நிகழ்ச்சியொன்றில் அவர் குனிந்தபோது, பக்கவாட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஆபாச கோணத்தில் ஜெயச்சந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் ஷேர் செய்தார்.

ஆபாச வர்ணனை

ஆபாச வர்ணனை

இந்த புகைப்படத்திற்கு ஆபாச வர்ணனை செய்திருந்தார் ஜெயச்சந்திரன். மேலும், பாஜக பிரமுகராக இருந்த ராகவன் உள்ளிட்டோர் பெயர்களையும் இழுத்து ஜெயச்சந்திரன் அந்த புகைப்படத்தில் கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாஜக ஆதரவாளர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயச்சந்திரன் தனது ட்விட்டர் கணக்கை லாக் செய்து கொண்டார். அதாவது ஏற்கனவே ஃபாலோ செய்தவர்களை தவிர வேறு யாருக்கும் அவரது ட்வீட்டை பார்க்க முடியாது.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

போலீஸ் கமிஷனரிடம் புகார்

இருப்பினும் அவர் ட்வீட்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து காயத்திரி ரகுராம், புகார் அளித்தார். ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை

இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், மாநில நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், அணிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

பாஜக காயத்திரி ரகுராம்

இந்த நடவடிக்கையில் காயத்திரி ரகுராம் திருப்தியடையவில்லை. அவர் வெளியிட்டுள்ள வரிசையான ட்விட்டர் பதிவுகளில், ஏன் தற்காலிகமாக நீக்கம்? தமிழ்நாட்டுக்கு ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் போன்றவர்கள் பயங்கரமான வக்கிரங்கள் மோசமான சேவை நாங்கள் விரும்பவில்லை.. எனக்கு நீதி வேண்டும். அவரை Goondas கைது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். பெண்களின் உடல் என்பது கருத்து சொல்லி விட்டு விலகும் ஒரு பொருளல்ல மற்றும் நிர்ணயிக்கப்பட வேண்டிய விகிதம் அல்ல. வக்கிரமான அர்த்தத்தில் வீடியோவைப் பகிர்வதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் எந்த மகளுக்கும் இப்படி நடக்கக் கூடாது. இவ்வாறு காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

English summary
Finance minister PTR Palanivel Thiagarajan take action against the twitter abuser Jayachandran of DMK who abuse BJP leader Gayathri Raguram with her photo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X